districts

குரூப்- 2 தேர்வு: 14 பேருக்கு அனுமதி மறுப்பு

திண்டிவனம், மே 21- டி.என்பி.எஸ்சி அறிவித்துள்ள குரூப் 2, 2ஏ பொதுத்தேர்வு  திண்டிவனம் அருகே திரு வெண்ணைநல்லூர் சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. தேர்வு எழுத வருவோர் ஒரு மணி நேரம் முன்னதாக 8.30 மணிக்கு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் தேர்த்திருவிழா நடந்தது. இதனால் திண்டிவனத்திலிருந்து பல பகுதிகளுக்கு மாற்று பாதையில் பேருந்து மாற்றிவிடப்பட்டது. இதனால் இந்த பாலிடெக்னிக் தேர்வு எழுத சுமார் 14 பேர் கால தாமதமாக வந்ததால் தேர்வு அறையில் கண்காணிப்பில் இருந்த வர்கள் தேர்வு எழுத மறுத்து விட்டனர். இதனால் அந்த 14 பேரும் அவர்களது பெற்றோருடன் திண்டிவனம் - திருவண்ணா மலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் ரோசனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.