திண்டுக்கல், டிச.8- பல்வேறு மாநிலங்க ளுக்கு வேலைவாய்ப்புக் காக செல்லும் போது தொட ர்பு மொழி சிக்கலாக உள்ள தால் இளைஞர்களும், இளம்பெண்களும் தங்களது மொழித்திறன்களை வள ர்த்துக் கொள்ள வேண்டும் என்று திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம் கேட்டுக் கொண் டுள்ளார்.
திண்டுக்கல்லில் சனி யன்று எம்.வி.எம். அரசு கலைக் கல்லூரியில் நடை பெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பணி ஆணை பெற்றவர்களுக்கு பணிச்சான்று வழங்கிய பிறகு விழாவில் சச்சிதானந் தம் எம்.பி. உரையாற்றியதாவது:
இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள், இளம்பெண் கள், இதையே நிறைவாக கருதி நின்றுவிடக்கூடாது. தங்களின் அன்றாடத் தேவை களை நிறைவு செய்து கொள்வதற்கு இந்த தற்கா லிக வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்டமாக அரசு பணி களை நோக்கிய முன்னெ டுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக ரயில்வே, வங்கி உள்ளிட்ட பொதுத் துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள் ளன. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும். பணிச்சூழலில் வெவ்வேறு மாநிலங்க ளுக்குச் செல்லும் போது தொடர்பு மொழி பெரும் சிக் கலாக அமையும். இதை எதிர்கொள்ளும் வகையில் மொழித் திறன்களை வள ர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திண் டுக்கல் ஆட்சியர் பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (நநி)