ஒட்டன்சத்திரம், டிச.18- ஒட்டன்சத்திரம் அருகே பாஜக தலைவர் அண்ணாமலையின் உறவினர்கள் வீடு மற்றும் நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் டிசம்பர் 18 அன்று சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி பேருந்து நிலையம் அருகே வசித்துவரும் நிதி நிறுவன அதிபர் செந்தில்குமார்(வயது 49) இவர் சொந்தமாக நிதி நிறுவனம் வைத்துள்ளார். தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் கந்து வட்டிக்கடை வைத்துள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுத்து வருகிறார்.
இவர் பாஜக தலைவர் அண்ணா மலையின் உறவினர் ஆவார். நேற்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மதுரையில் இருந்து 6 கார்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதி காரிகள், செந்தில்குமாரின் வீட்டின் மெயின் நுழைவுவாயிலை பூட்டு போட்டு அடைத்தனர். செந்தில்குமாரிடம் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த புகாரின் பேரில் வந்துள்ளதாகவும், வீட்டை சோதனையிட வேண்டும் என்று கூறி வீட்டில் இருந்த செந்தில் குமாரின் குடும்பத்தினர் செல்போன்களை வாங்கி அணைத்து ( சுவிட் ஆப்) வைத்துக் கொண்டு அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் வீட்டுமுன்பு கூடத்தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 6 மணி நேரத்திற்கு பிறகு செந்தில்குமா ரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவ ணங்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதே போல ஓட்டன்சத்திரத்தில் தாராபுரம் சாலையில் குழந்தைவேல் அவரது தம்பி முருகன் ஆகியோர் சொந்தமாக நடத்தி வரும் நகை கடையின் முன்பக்க கதவை பூட்டிவிட்டும், அதே போல நகை கடையின் மாடியில் உள்ள வீட்டிலும், இவர்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் வரி ஏய்ப்பு குறித்து 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் சோதனை நடத்தினர்.பின்னர் நகைக் கடையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். (ந.நி)