districts

img

தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிக்கு தமிழக வீரர்கள் தேர்வு

சின்னாளபட்டி, டிச.7-  ஜனவரி மாதம் டேராடூனில் நடைபெறும் தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிகளுக்கு தமிழக அணி சார்பில் கலந்துகொள்வதற்கான தகுதி போட்டிகள் கடந்த வாரம் ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சின்னாள பட்டி, பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம் ஆகிய பகுதிகளிலிருந்து இருபதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் பதினைந்து மாணவர்கள் கொண்ட குழுவினர் முதலிடம் பிடித்து தங்கம் வென்று தேசிய போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றனர். அவர்களை பாராட்டி, ஊக்குவித்து பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் வியாழனன்று நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் பயிற்சியாளர் பிரேம்நாத், இணை பயிற்சி யாளர் சக்திவேல், தங்கலட்சுமி, ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கு வித்து, வாழ்த்தி பரிசுகள் வழங்கி பாராட்டினர். உடன் பெற் றோர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.