திண்டுக்கல், பிப்.10- நில அபகரிப்பாளர்களுக்கு எதிராக வழக்கு பதியச் சொல்லி நீதிமன்றம் உத்தர விட்டு நடவடிக்கை எடுக்காமல் கால தாமதப்படுத்திய அம்மையநாயக்கனூர் காவல்துறையினரைக் கண்டித்து காவல்நிலையம் முன்பாக விஷம் குடித்த விவசாயி உயிரிழந்தார். கொடைரோடு அருகேயுள்ள குல்லக் குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கன்னாமர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாண்டி. இவர் சிறுமலை அடிவாரத்தில் 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இவரது நிலத்திற்கு அருகில் முன்னாள் ஐ.ஜி. ஒருவரின் நூறு ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயி பாண்டியின் தோட்டம் ஐ.ஜி.யின் தோட்டம் அருகில் இருப்பதால் அந்த 2 ஏக்கர் நிலத்தை அப கரிப்பதற்காக பள்ளபட்டியைச் சேர்ந்த நாச்சியப்பன், பழைய வத்தலக்குண்டு வைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கர், பொட்டி செட்டிபட்டியைச் சேர்ந்த சின்னக்கருப்பு ஆகியோர் மிரட்டி வந்தனர். இது தொ டர்பாக விவசாயி பாண்டி தனது மகன் சுதீஷ் கண்ணனுடன் சென்று அம்மைய நாயக்கனூர் காவல்நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். பாண்டியை மிரட்டிய 3 பேரும் ஐ.ஜி. தோட்டத்தில் வேலை செய்பவர்கள். எனவே காவல்துறையினர் இந்த புகாரை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து விவசாயி பாண்டி தான் அளித்த புகார் மீது வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று நிலக்கோட்டை நீதிமன்றத்தின் மூலம் உத்தரவை பெற்றார். ஆனால் அம்மையநாக்கனூர் காவல் ஆய்வாளர் நீதிமன்ற உத்தர விட்டும் வழக்கு பதியாமல் இழுத்தடித்து வந்தார். இந்நிலையில் விவசாயி பாண்டி அம்மையநாயக்கனூர் காவல்நிலையம் சென்று கேட்ட போது காவல்நிலைய ஆய்வாளர் பாண்டியை மிகக் கேவல மாக திட்டியுள்ளார். இதனால் மன முடைந்த விவசாயி பாண்டி காவல்நிலை யம் முன்பாக விஷமருந்தினார். ஆனால் காவல்நிலைய அதிகாரிகள் பாண்டியை லூசு என்றும், இப்படித்தான் மிரட்டுவார் என்றும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர்.
இதற்கிடையில் விஷம் குடித்த பாண்டி மயக்கமுற்றார். நீண்டநேரம் அவர் அசைவற்று கிடந்ததைப் பார்த்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பினர். பாண்டி வாயில் நுரைதள்ளியிருந்ததை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். உயி ருக்கு போராடிய விவசாயி பாண்டி திண்டுக் கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். பாண்டி இறந்ததை அறிந்த அம்மைய நாயக்கனூர் ஆய்வாளர் உள்ளிட்ட காவ லர்கள் அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்து வழக்கில் தொடர்புடைய நாச்சி யப்பன், சங்கர், சின்னக்கருப்பு ஆகியோ ரை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விவசாயி பாண்டி கொடுத்த புகாரை கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான் தற்கொலை செய்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். அவர் விஷமருந்திய பின்னரும் கூட மெத்தன மாக செயல்பட்டதால் பாண்டி உயிரிழக்க நேரிட்டது என்று அம்மையநாயக்கனூர் போலீசாரின் நடவடிக்கையை பொதுமக்க ளும் சமூக ஆர்வலர்களும் கண்டித்துள் ளனர். (நநி)