திண்டுக்கல், டிச.8- விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சாணார்பட்டி ஒன்றியத்தில் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கொசவ பட்டி, மேட்டுக்கடை, சில் வார் பட்டி, இந்திராநகர், தவசிமடை, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதி களில் நடைபெற்ற பிரச்சா ரத்தில் மாவட்டச்செயலாளர் பாப்பாத்தி, ஒன்றிய நிர்வாகி கள் ஈஸ்வரி, பழனியம்மாள், முருகேஷ்வரி, ரசூல்பீவி, பஞ்சம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதி ராக கோஷங்கள் எழுப்பினர்.