திண்டுக்கல், டிச.8- பழனியில் ஞாயிறன்று நடைபெற்ற மெகா இருதய பரிசோதனை முகாமை திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம் துவக்கி வைத்தார். பழனி மலை அடிவாரத்தில் உள்ள சித்தநாதன் திருமண மண்டபத்தில் நெய்க்கார பட்டி அரிமா சங்க அறக்கட் டளை மற்றும் சாய் கிருஷ்ணா மகளிர் நல சிறப்பு மருத்து வமனை இணைந்து நடத்திய இந்த இலவச மெகா இரு தய பரிசோதனை முகாமை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஏராளமா னவர்கள் தங்களின் இருதய பரிசோதனைகளை செய்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஜி.எஸ்.டி. ஒருங்கி ணைப்பாளர் கே.சுப்புராஜ், அமைச்சரவை ஆலோசகர் டாக்டர் என்.மயில்சாமி, டாக் டர் தியாகு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமசாமி, எஸ்.கமலக் கண்ணன், பழனி ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.