districts

img

மாதர் சங்கம் பிரச்சார இயக்கம்

சின்னாளப்பட்டி, டிச.8- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் விஷம்போல் ஏறி வரும் விலைவாசியை கண்டித்து 15 நாட்கள் தொடர்  பிரச்சார இயக்கம் நடைபெற வுள்ளது. 

இதனொரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்  தூர் ஒன்றியத்தில் சின்னா ளப்பட்டியில் துவங்கி அய்யம்பாளையத்தில் இப்பிரச்சார இயக்கம் நிறைவு பெற்றது.

பேரூராட்சிகளில் 100 நாள் வேலையை அமல்  படுத்த வேண்டும். டாஸ்மாக்  கடைகளை அப்புறப் படுத்த வேண்டும். ரேசன்கடை களில் பொருட்களை முறை யாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. 

சங்கத்தின் மாவட்டத் துணைத்தலைவர் ஆர்.வனஜா தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலா ளர் வி.பாப்பாத்தி, ஒன்றியச்  செயலாளர் பி.மகாலெட் சுமி, ஒன்றியத் தலைவர் சசி கலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.