districts

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதி முதல் தவணையாக ரூ.1 லட்சம் பழனி பொதுக் கூட்டத்தில் பிரகாஷ்காரத்திடம் வழங்கல்

திண்டுக்கல், டிச.14 - மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு நிதி  முதல் தவணையாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்திடம் கட்சியின் பழனி நகர்க் குழு சார்பாக வழங்கப் பட்டது.

பழனி நகரில் டிச.10 அன்று மின் வாரியத்  திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு முன்னாள் நகர்மன்றத் தலைவர் வி.இராஜ மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ராமசாமி வரவேற் றார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே.பாலபாரதி, என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் ஆகியோர் பேசினர்.

 மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே. அருள்செல்வன், வசந்தாமணி, எஸ்.கமலக்கண்ணன், ஜி.ராணி, ஆசாத், அஜாய், கே.ஆர்.பாலாஜி, நகரச் செயலாளர் கே.கந்த சாமி, ஒன்றியச் செயலாளர்கள் ஈஸ்வரன், கனகு, பாலசுப்ரமணி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் கௌரி, சிவமணி, சுமதி, ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டக் குழு உறுப்பினர் பகத்சிங் நன்றி கூறினார்.  

இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.1 லட்சத்தை முதல் தவணையாக சிபிஎம் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எம்.ராமசாமி, நகரச் செயலா ளர் கே.கந்தசாமி ஆகியோர் பிரகாஷ் காரத்திடம் வழங்கினர்.