districts

img

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: சிறுமி உட்பட 6 பேர் பலியான துயரம்! தலா ரூ. 3 லட்சம் முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

திண்டுக்கல், டிச. 13 - திண்டுக்கல் தனியார் மருத்துவ மனையில் ஏற்பட்ட தீ விபத்தில், சிறுமி உட்பட 6 பேர் உடல்  கருகி  பலியான துயரம் ஏற்பட்டுள்ளது. 

எலும்பு முறிவு சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையான இங்கு 42 பேர் வரை உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலை யில், வியாழனன்று (டிசம்பர் 12) இரவு 9 மணியளவில் இந்த மருத்துவ மனையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மருத்துவமனையே புகை  மண்டலமாக மாறியதால், நோயாளி களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் உள்ள அவசரப் பாதையின் வழியாக நோயாளிகள் வெளியேற்றப்பட்டு, அவர்கள் 50 ஆம்புலன்ஸ்கள் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட னர். இதனால், பெருமளவு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. 

தீயை முழுமையாக அணைத்த பிறகு வார்டுகளில் சோதனையிட்ட போது தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன் (30), மாரியம்மாள் (50), தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுருளி (50), சுப்புலட்சுமி (45), திண்டுக்கல் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (36), கோபிகா (6) ஆகிய 6 பேர் உடல் கருகி பலியாகி இருந்தது தெரியவந்தது.

அமைச்சர்கள் ஆறுதல்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை  பெறுபவர்களை இரவே அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பி னர் செந்தில்குமார் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.  வெள்ளியன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி,  ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் பி. ஆஸாத், தா. அஜாய் கோஷ், கே.ஆர். பாலாஜி, நகரச்செயலாளர் ஏ. அரபு முகமது, ஒன்றியச் செயலாளர் சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கே.எஸ்.கணேசன், மாமன்ற உறுப்பினர் எஸ். ஜோதிபாசு ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.as

தமிழக முதல்வர் இரங்கல்

தீ விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் ரூபாயும், பலத்த காய மடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரு பவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.