districts

ஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிக்கும் துறை என்று மாற்ற கோரிக்கை

ஒட்டன்சத்திரம், டிச.8- ஆதிதிராவிடர் நலத் துறை என்ற பெயரை மாற்றி,  மத்திய அரசைப் போல சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிக்  கும் துறை என்ற பெயரில் இயங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று ஒட்டன்சத்தி ரத்தில் ஆதித்தமிழர் பேரவை  நிறுவன தலைவர் இரா. அதியமான் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அருந்  ததியர் உள் இட ஒதுக்கீடு  பாதுகாப்பு பேரணி சம்பந்த மான ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் இரா.அதியமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். 

கூட்டத்தில் அருந்ததியர் ஜனநாயக பேரவை தலை வர் கல்யாணசுந்தரம், தமிழர்  சமூகநீதி கழக பொதுச்செய லாளர் சரவணவேல், திரா விடர் இயக்க தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் விடு தலை, ஆதித்தமிழர் பேரவை  மாவட்ட செயலாளர் சுந்தரம்  மற்றும் ஏராளமான நிர்வாகி கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் இரா. அதியமான் செய்தியாளர்  களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது: 

2026 சட்டமன்ற தேர்தலி லும் திமுகவிற்கு ஆதரவாக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம். சட்டமன்ற தேர்  தலில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது.

ஆதிதிராவிடர் நலத் துறை என்ற பெயரை மாற்றி,  ஒன்றிய அரசைப் போல சமூகநீதி மற்றும் அதிகாரம் அளிக்கும் துறை என்ற பெய ரில் இயங்குவதற்கு தமிழக  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருந்ததியர் அமைப்பு களில் உள்ளவர்களுக்கு மற்ற அனைத்து கட்சியிலும் நாடாளுமன்றம், சட்டமன் றம், உள்ளாட்சி ஆகிய தேர்  தல்களில் போட்டியிட அதிக மாக வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் ஜன வரி 6ம் தேதி சென்னையில்  நடைபெற உள்ள அருந்ததி யர் உள் இட ஒதுக்கீடு பாது காப்பு பேரணியில் ஒரு லட்  சத்திற்கு மேல்  தொண்டர் களை திரட்டுவதற்கு ஏற்பாடு  செய்து கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.