திண்டுக்கல், டிச.8- கொடைக்கானல் தாண்டிக்குடி மலை கிராமத்தில் 2 வருடத்திற்கு ஒரு முறை சேற் றினை உடம்பில் பூசி கொண்டு சமய வேறு பாடின்றி ஆடிப்பாடி கொண்டாடினர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கா னல் கீழ்மலை கிராமங்களில் ஒன்றாக தாண் டிக்குடி கிராமம் உள்ளது.
இந்த கிரா மத்தில் ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீபட்டாளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவி லின் திருவிழா மூன்று நாட்கள் நடை பெறும். முதல் நாளான ஞாயிறன்று சேத்தா ண்டி வேடம் போடும் நிகழ்ச்சி நடைபெற் றது. இந்த நிகழ்ச்சியில் தாண்டிக்குடி, மங்க ளம் கொம்பு, பட்லாங்காடு, கொட லங்காடு, பண்ணைக்காடு, அரசன் கோடை, காமனூர் உள்ளிட்ட மலைகிராமங்களைச் சேர்ந்த 100க்கணக்கானோர் வயது வேறு பாடு இன்றியும், சமய வேறுபாடின்றியும் கலந்து கொண்டனர்.
இந்த கிராம திருவிழாவில் பக்தர்கள் ஒன்று திரண்டு ஒருவர் மீது ஒருவர் சேற் றினை அடித்தும், சேற்றை பூசியும் சேத்தா ண்டி வேடம் பூண்டும், தலையில் மண்களை வைத்து அதில் செடியினை வைத்து கொண்டு ஊருக்குள் ஊர்வலமாக வருவர். சேற்றை உடலில் பூசிவதால் தங்களுக்கு நோய் நொடிகள் வருவதில்லை என கிராம மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.