தருமபுரி, டிச.17- பாலக்கோடு பகுதியிலுள்ள ஏரிகளுக்கு செல்லும் கால்வாய் புதர் மண்டி அடைத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில் பொது மக்களே பண தூர்வாரி செலவு செய்தும் வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து வெளி யேற்றப்படும் உபரிநீர், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி களில் உள்ள செங்கன்பசுவந்தாவ் ஏரி, ஜெர்தலாவ் ஏரி, பூவன் கொட்டாய், தாமரை ஏரி, புலிக்கல் ஏரி வழி யாக தும்பலஅள்ளி அணையை சென்றடைகின்றது. கடந்த டிச.7 ஆம் தேதி சின்னாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், நீர் வழிக்கால்வாய்கள் பொதுப்பணித்துறையால் தூர் வாரப்படாததால், கால்வாய் முழுவதும் செடி கொடி கள் முளைத்தும், குப்பைகளால் நிரம்பியும் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது.
இதனால் பாசன கால் வாய்களை நம்பியும், ஏரிகளை நம்பியும் உள்ள விவ சாயிகள் தண்ணீர் இல்லாமல் சாகுபடி செய்ய முடிய வில்லை. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கள் கண்டுகொள்ளாததால் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தினால், கிராம மக்களே தங்களது சொந்த செலவில் ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய்களை தூர்வாரி வருகின்ற னர்.
மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் அரசு செய்ய வேண்டிய பணியை, ஊர் பொதுமக்களே சொந்த பணத்தைக்கொண்டு தூர் வாரி வருகின்றனர். இது மாவட்ட நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை காட்டு வதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.