தருமபுரி, டிச.11- சின்னாற்றின் உபரிநீர், விவசா யத்திற்கு பயன்படாமல் கடலில் கலந்து வருவதால், ஆற்றில் தடுப் பணை அமைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தளி, தேன்கனிக்கோட்டை, அஞ் செட்டி வனப்பகுதிகளில் இருந்து உருவாகும் சின்னாறு நதியானது, தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அணைக்கு வந்து மாரண்டஅள்ளி, பாலக்கோடு, பெரியூர், உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலக்கிறது.
ஆண்டுதோறும் மூன்று முறை வெள்ளம் பெருக்கெடுத்து, பரந்து விரிந்து வரும் சின்னாறு, நல்லூர் ஊராட்சியில் தொல்லேகாது என்ற இடத்தில் சுமார் 50 அடி உயரத் திலிருந்து நீர்வீழ்ச்சியாக கொட்டு கிறது. சின்னாற்றில் பாய்ந்து வரும் நீரானது, தொல்லேகாது என்ற இடத்தில் பாறைகளுக்கிடையில் இரண்டாக பிரிந்து இடது மற்றும் வலது புற காதுகளில் இருந்து தண் ணீர் வெளியேறும் வகையில் தோற் றமளிக்கிறது. இதனால் இந்த இடத் திற்கு தொல்லேக்காது நீர்வீழ்ச்சி என்று பெயர் ஏற்பட்டது.
இது ‘மினி ஒகேனக்கல் வாட்டர் பால்ஸ்’ என் றும் அழைக்கப்படுகிறது. இந்த சின் னாறு நதி தருமபுரி மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நதியாகும். இந்த ஆற்றங்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற பெருமாள் மற் றும் ஈஸ்வரன் கோவில் அமைந்துள் ளதால், பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் புனித நீராடவும், ஈமச் சடங்கிற்காகவும், சுற்றுலாப் பய ணிகளும் வந்து செல்கின்றனர். தற் போது மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி வனப்பகுதிகளி லும், பெட்டமுகிலம் மலைப்பகுதி களில் நல்ல மழை பெய்ததால், தற்பொழுது பஞ்சப்பள்ளி சின் னாறு அணையின், வழியாக இந்த ஆற்றில் வெள்ளம் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீரானது தொல்லேக்காது நீர் வீழ்ச்சியில் இரண்டு பக்கமும் அரு வியாக கொட்டுகிறது. கடந்த 10 மாதத்திற்கு பிறகு தொல்லேக்காது நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதி கரித்துள்ளதால், அருவியில் குளிப் பதற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்ற னர். இதனிடையே, இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக் டர் பரப்பளவில் நெல், கரும்பு, வாழை, கத்தரி முட்டைக்கோஸ், முள்ளங்கி உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகின்றனர்.
ஆனால், இந்த ஆற்றில் வரும் நீரா னது இப்பகுதி விவசாயிகளுக்கு எந்தப்பயனுமின்றி, நேரடியாக ஒகேனக்கலுக்கு சென்று காவிரியில் கலக்கிறது. இதனை தடுக்க தொல் லேகாது பகுதியில் தடுப்பணை கட் டவும், இப்பகுதியை சுற்றுலாத் தல மாக மாற்றவும் தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயி கள் வலியுறுத்தி வருகின்றனர். விவ சாயிகளின் கோரிக்கையை ஏற்று பல் வேறு அரசு அதிகாரிகள் இப் பகுதிக்கு நேரடியாக ஆய்வு மேற் கொண்டு, இதுவரை எந்த ஒரு நடவ டிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தமிழக அரசு சின்னாற்றில் அணை கட்ட முன்வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பெரும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.