districts

img

நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தமிழக அரசு நிவாரணம் வாச்சாத்தி மக்கள் 16 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணை!

தருமபுரி, செப். 20 - வாச்சாத்தி வன்கொடுமைச் சம்ப வத்திற்கு நிவாரணமாக, பாதிக்கப் பட்ட மக்களின் வாரிசுதாரர்களுக்கு, நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி வழங்கினார்.

அதிமுக ஆட்சியின் போது, கடந்த 1992-ஆம் ஆண்டு ஜூன் 20, 21, 22 தேதிகளில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாச்சாத்தி கிராமத்திற்குள் புகுந்த வனத்துறையினர், காவல்துறை மற்றும் வருவாய்துறையைச் சேர்ந்த 269 பேர், அந்த கிராமத்தையே சூறை யாடினர். வீடுகளை அடித்து நொறுக்கினர்; குடிநீர் கிணற்றில் மண்ணெண்ணெய்யை ஊற்றினர். ஆடு, கோழிகளை அபகரித்து, ரேசன்  கடை பொருட்கள் மூலம் சமைத்து  சாப்பிட்டதுடன், 18 இளம்பெண் களை கும்பல் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கினர். மனித உரிமைகளை முழுமையாக மீறி, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர்.

நீண்ட - நெடிய போராட்டம்

வெளியுலகம் அறியாத மலை வாழ் கிராம மக்களை கொடூரச் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலைவாழ் சங்கம் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தின. இதனை யடுத்து, சிபிஐ (மத்திய புலனாய்வு  துறை) விசாரணைக்கு உத்தரவிடப் பட்டது. 

31 ஆண்டு  சட்டப்போராட்டத் திற்குப் பின்னர், இவ்வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதி மன்றம், வனத்துறையினர், காவல் துறை மற்றும் வருவாய்துறையைச் 269 பேரும் குற்றவாளிகள் என்று  தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம்  அளித்த தீர்ப்பை உறுதிசெய்தது, குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ. 10 லட்சம், குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை, பொருளா தார ரீதியாக முன்னேற தொழில் மற்றும் இரண்டு ஏக்கர் நிலம், கிராமத் திற்கு தேவையான அடிப்படை வசதி கள் செய்து தர வேண்டும் எனவும் ஆணையிட்டது.

ரூ. 10 லட்சம் நிவாரணம்

அதனடிப்படையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலை வர்கள், தமிழக முதல்வரை சந்தித்து  உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படை யில் வாச்சாத்தி மக்களுக்கு நிவார ணம், அரசு வேலை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர். அதைத்தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது போல் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ. 10  லட்சத்திற்கான காசோலை, முதல மைச்சர் பொது நிவாரண நிதியி லிருந்து கடந்த பிப். 9 ஆம் தேதி யன்று வாச்சாத்தி கிராமத்திற்கு நேரில் சென்று அரூர் கோட்டாட்சியர் வில்சன் வழங்கினார்.

இதனையடுத்து, நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள இதர அம்சங்கள் நிறைவேற்றப்படாதது குறித்து கடந்த இரண்டு நாட் களுக்கு முன்பு, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவ ரும், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பின ருமான பெ. சண்முகம் ஊடகங் களில் பேட்டியளித்தார். அதில், ‘பாதிக்கப்பட்ட மக்களின் வாரிசுதாரர் களுக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

பணி நியமன  ஆணைகள் வழங்கல்

இந்நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று, வாச்சாத்தி வன் கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களின் வாரிசுதாரர்களுக்கு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலம் தகுதியுள்ள 16 நபர் களுக்கு வருவாய்த்துறை மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அலுவல கங்களில் பணியாற்றிட ‘அலுவலக உதவியாளர்’ பணி நியமன ஆணை களை மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) செம்மலை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என். மல்லையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெ. சண்முகம் நன்றி

தங்களுக்கு நீதி, நிவாரணம், வாரிசுகளுக்கு அரசு வேலை கிடைக்கப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்திற்கு வாச்சாத்தி கிராம மக்கள் தங்களின் நன்றியை தெரிவித்தனர்.

அதேபோல உயர் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும், முயற்சி எடுத்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள சிபிஎம் மத்தி யக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், தீர்ப்பின் இதர அம்சங்களையும் முழுமையாக நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தொடர் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள் ளார்.