districts

சென்னை முக்கிய செய்திகள்

வரி பாக்கி: நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

சென்னை,செப்.20- சென்னை  நங்கநல்லூர்  அருகருகே 2 திரையரங் கங்கள் உள்ளன. இந்த தியேட்டர்களுக்கு கூடுதல்  வரி போட்டதாக கோரி  மேல்முறையீடு செய்திருந்த னர். ஆனால் மாநகராட்சி வரி செலுத்துமாறு அறி வுறுத்தினர். 2018ம் ஆண்டு முதல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.60  லட்சம் வரியை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பி யும் வரியை செலுத்தாத தால், ஆலந்தூர் மண்டல  மாநகராட்சி உதவி வருவாய்  துறை அதிகாரிகள் வியா ழனன்று ஊழியர்களுடன் வந்தனர். பின்னர்அந்த 2  திரையரங்கிற்கும் சீல் வைத்து, மின் இணைப்பை துண்டித்தனர்.

ஆன்லைன் மோசடி:  சென்னை காவல்துறை எச்சரிக்கை

சென்னை,செப்.20- ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் மட்டும் ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் இந்த ஆண்டு ரூ. 132.46 கோடி பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாகச் சென்னையில் கடந்த 8 மாதங்களில் இது போன்ற 190 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வயதானவர்கள் மற்றும் பெண்களைக் குறிவைத்து இந்த மோசடிகள் நடைபெறுகிறது எனக் கூறப்படுகிறது. பொது மக்கள் இது போன்ற குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ள லாம் எனப் பெருநகர் சென்னை காவல் ஆணையர் அருண்  அறிவுறுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாகப் பெருநகர சென்னை காவல்துறை சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “இந்தியாவில் கடந்த சில  மாதங்களாக வயதானவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நபர்கள், பெண்களைக் குறிவைத்து அடையாளம் தெரியாத தொலைப்பேசி எண்களில் இருந்து பெட்டெக்ஸ் ,புளுடார்ட் கொரியர் நிறுவனங்களில் இருந்து பேசுவதுபோல் தொடர்பு கொள்கின்றனர். அப்போது உங்களுடைய பெயரை கூறிப்பிட்டு உங்க ளுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இந்தியாவி லிருந்து வெளிநாட்டிற்குப் புலித்தோல் போதைப் பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் சிம் கார்டுகள், போலி பாஸ்போர்ட்கள் மற்றும் சில கடத்தல் பொருட்கள் கொண்ட பார்சல் வந்திருப்பதாகவோ கூறுகின்றனர். அதோடு டிராய் (TRAI) எனப்படும் இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாகக் கூறி நம்முடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணை பயன்படுத்தி பல வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு அதன்மூலம் பல  கோடி ரூபாய்க்கு ஹவாலா பணப்பரிமாற்றம் நடை பெற்றுள்ளதாகவும் தெரிவித்து அதுசம்மந்தமாக மும்பை  சைபர் கிரைம் போலீஸ், சிபிஐ, குற்ற பிரிவு போலிசார் விசாரணை செய்ய வேண்டியதிருப்பதாகவும் கூறி  மோசடியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி  4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரியம் 

சென்னை, செப்.20- சென்னை குடிநீர் வாரியம் சார்பில் அண்ணாநகர் மண்டத்திற்கு உட்பட்ட பகுதி அலுவலகத்தில் உள்ள நீரேற்று நிலை யத்தின் செயல்பாடுகள், அண்ணாநகர் ‘எச்’ பிளாக்கில் உள்ள அண்ணாநகர் ‘ஏ’  கழிவுநீர் உந்து நிலையம், சாந்தி காலனியில் உள்ள அண்ணாநகர் ‘பி’ கழிவுநீர் உந்து  நிலையங்களின் செயல்பாடுகளை சென்னை  குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய் வியாழனன்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு 8 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 130 குடி நீர் பகிர்மான நிலையங்கள், 22 கழிவுநீர்  சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 356  கழிவுநீர் உந்து நிலையங்கள் 24 மணி  நேரமும் செயல்படுவதற்கு ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. கழிவுநீர்  பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்பு களை சரி செய்வதற்காக 299 தூர்வாரும்  இயந்திரங்கள், 73 அதிவேக கழிவுநீர் உறிஞ் சும் வாகனங்கள், 225 ஜெட்ராடிங் வாகனங் கள் என மொத்தம் 597 கழிவுநீரகற்றும் இயந்திரங்கள் அதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், பருவமழை காலத்தில் மழை நீர் தேங்கினால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துவதற்காக பிற மாவட்டங்களிலிருந்து கூடுதலாக 60 கழிவுநீர் அகற்றும் லாரிகள் கொண்டு வரு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. மொத்தம் உள்ள 1,60,092  இயந்திர நுழைவாயில்களில் இதுவரை  1,49,712 இயந்திர நுழைவாயில்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. கழிவுநீர் குழாய்கள் கட்டமைப்பில் மொத்தம் உள்ள 4,156 கி.மீ நீளத்தில் இதுவரை 4,100 கி.மீ தூரம் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்ட 15  மண்டலங்களில் கழிவுநீரகற்றும் பணி களை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் பகிர்மான நிலையங்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்கள் தடையின்றி செயல்படுவதற்கு ஏதுவாக ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது. பொதுமக்கள் கழிவுநீரகற்றல் தொடர்பாக புகார்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தை பொதுமக்கள் 044-4567 4567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1916-ல் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி  செய்யவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

லண்டன், சிங்கப்பூர் செல்லும்  விமானங்கள் தாமதம்  பயணிகள் கடும் அவதி!

சென்னை,செப்20- சென்னையில் இருந்து லண்டன் மற்றும் சிங்கப்பூர் செல்லும் 2 விமானங்கள் சுமார் 4 மணி நேரம் தாமதமான தால், 400க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை விமான நிலையத்தில் அவதியுற்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெள்ளியன்று  அதிகாலை 5.30 மணிக்கு லண்டன் செல்ல  வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், வெள்ளியன்று  4 மணி நேரம் தாமதமாக காலை 9.30 மணிக்கு  புறப்பட்டுச் சென்றது. லண்டனிலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு வர வேண்டிய  இந்த விமானம் காலை 8 மணிக்கு தான் சென்னை வந்தது. இதை அடுத்து, இந்த லண்டன் விமானம் 4 மணி நேரம்  தாமதமாக காலை 9:30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றது. அதுபோல, சிங்கப்பூரில் இருந்து வியாழனன்று இரவு  11.50 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய ஏர் இந்தியா  எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் வெள்ளிஅதிகாலை 4 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. இதை அடுத்து, இந்த  விமானம் சுமார் 4 மணி நேரம் தாமதமாக அதிகாலை 5.30  மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.

தலைமறைவு குற்றவாளி 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் கைது

சென்னை,செப்.20- கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகள் வெளிநாட்டில்  தலைமறைவாக இருந்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த இளைஞர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (27). இவர் மீது கடந்த 2020ஆம் ஆண்டு கொலை  முயற்சி வழக்கு ஒன்று கடலாடி போலீசில் பதிவாகியது. இதை அடுத்து, கடலாடி போலீசார் மாரிமுத்துவை கைது  செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால், போலீசார்  தன்னை தேடுகிறார்கள் என்பதை அறிந்த மாரிமுத்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப் பாளர், மாரிமுத்துவை தேடப்படும் தலைமறைவு குற்ற வாளியாக அறிவித்தார். அது மட்டுமல்லாமல், அனைத்து  சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டது. இந்த நிலையில், வியாழனன்று இரவு  மஸ்கட்டிலில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள்  விமானத்தில் கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறை வாக இருந்த மாரிமுத்துவும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, அவர் கொலை முயற்சி வழக்கில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என தெரிய வந்தது. இதனையடுத்து மாரிமுத்துவை வெளியில் விடாமல் குடியுரிமை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து, சென்னை விமான  நிலைய காவலர்கள் மூலம்  ராமநாதபுரம் கடலாடி காவல்  நிலைய தனிப்படை போலீசாரிடம்  மாரிமுத்துவை ஒப்படைத்தனர்.

சென்ட்ரல் - ஆவடி மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை,செப்.20- சென்னையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவை மற்றும் மாநகர பேருந்து ஆகியவை பொது போக்கு வரத்தில் முக்கியமாக உள்ளன. இவற்றில் மின்சார ரயில் சேவை பிரதானமானதாக உள்ளது. சென்னை மற்றும் அதன்  புறநகர் பகுதிகளை மின்சார ரயில் சேவை இணைக்கிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் போது மாநகர பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள், ரயில்  பாதை பராமரிப்பு,பொறியியல் பணி, காரணமாக அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அப்போது குறிப்பிட்ட வழித்தடங்க ளில் ரயில் பகுதியாக அல்லது முழுமையாக ரத்து செய்யப்படும். அந்த வகையில் ஆவடி ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆவடி ரயில்வே பணிமனையில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 12.15 மணிக்கு ஆவடிக்கு இயக்கப் படும் மின்சார ரயில்  ரத்து செய்யப்படுகிறது. செப்டம்பர் 20, 21 தேதிகளில் பட்டா பிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இரவு 10.45மணிக்கு  சென்னை சென்ட்ரல் இயக்கப்படும் மின்சார ரயில், ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. செப். 20, 21, 22 ஆகிய தேதிகளில் பட்டா பிராம் மிலிட்டரி  சைடிங் - சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 3.30 மணிக்கு செல்லும் மின்சார ரயில், பட்டா பிராம் மிலிட்டரி  சைடிங் - ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படு கிறது. என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

 செப்.30க்குள் வரி செலுத்த பொதுமக்களுக்கு குடிநீர் வாரியம் வேண்டுகோள்

சென்னை, செப். 20- சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும்  கழிவுநீரகற்று வரியினை யும், கட்டணங்களையும் கடைசி நாளான செப்டம்பர் 30ந் தேதிக்குள் செலுத்திட வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித் துள்ளது. வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங் கள் அனைத்து வேலை  நாட்களிலும், சனிக்கிழமை களிலும் இயங்கும். சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, கழிவுநீரகற்று வரி மற்றும்  கட்டணங்களை காசோலை மற்றும் வரை வோலைகளாக செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக் காக அனைத்து பகுதி அலுவ லகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை, வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர்கள் தங்களது நிலுவை தொகை யினை https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைத்தளத்தைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம். இ-சேவை மையங்கள் மற்றும் யூபிஐ, கியூஆர் குறியீடு, iPoS போன்ற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, கட்ட ணங்களை செலுத்தலாம். இவ்வாறு  சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி  மின்னணு பொருட்கள் திருட்டு: 6 பேர் கைது

சென்னை, செப். 20- சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கண்டெய்னர் திருடுபோன சம்பவத்தில் டிரெய்லர் லாரி உரிமையாளர் உள்பட 6 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் தனியார்  நிறுவனம் ஒன்று சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் பணியை செய்து வருகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து கண்டெய்னரில் வரும் சரக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பத்திர மாக அனுப்பி வைப்பது இந்த நிறுவனத் தின் வேலை. இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த  ஒரு பிரபல தனியார் நிறுவனத்திற்கு சீனா வில் இருந்து 40 அடி கண்டெய்னரில் லேப்டாப், நோட் பேட் ஆகியவை கப்பலில்  அனுப்பி வைக்கப்பட்டது. இது கடந்த 7-ம் தேதி சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த நிலையில், பெங்க ளூரைச் சேர்ந்த நிறுவனம் கண்டெய்னரை ஏற்றி வர கடந்த 11-ம் தேதி டிரெய்லர் லாரியை  அனுப்பியது. டிரெய்லர் லாரி ஓட்டுநர், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் யார்டுக்கு சென்று  பார்த்த போது கண்டெய்னரை காண வில்லை. இது தொடர்பாக தன்னை அனுப்பிய பெங்களூரு நிறுவனத்தின் அதி காரிகளுக்கு டிரைவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பெங்களூருவைச் சேர்ந்த  தனியார் நிறுவன அதிகாரிகள், வெளிநாடு களில் இருந்து சரக்குகளை கையாளும் மயிலாப்பூர் தனியார் நிறுவன உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ரூ.35 கோடி மதிப்பிலான எலெக்ட்ரானிக் பொருட்களில் இருந்த கண்டெய்னர் எங்கே போனது என விசாரித்தனர். இது  தொடர்பாக மயிலாப்பூர் நிறுவன ஆபரேஷன் மேலாளர் இசக்கியப்பன் துறை முகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  அதன் பேரில் போலீஸார் தீவிர விசாரணை  நடத்தி கண்டெய்னர் டிராக்கிங் ரிப்போர்ட்டை  ஆய்வு செய்தபோது, திருட்டு உறுதி செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் மைலாப்பூர் நிறுவனத்தில் பணியாற்றும் இளவரசன் என்பவர் திருட்டுக் கும்பலுடன் சேர்ந்து  இந்த மோசடி வேலையில் ஈடுபட்டது தெரிய  வந்தது. இதையடுத்து துறைமுகம் காவல் துறையினர் திருவள்ளூர் மணவாளன் நகரில், பதுக்கிவைக்கப்பட்டிருந்த எலெக்ட் ரானிக்ஸ் பொருட்கள் இருந்த கண்டெய் னரை மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக டிரெய்லர் லாரி உரிமையாளர் திருவள்ளூர் மணி கண்டன் (30), லாரிகளை ஏற்பாடு செய்யும்  இடைத்தரகர்கள் உள்ளிட்ட  6 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும்  இதில் சமந்தப்பட்ட மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஓசூர் அரசு பள்ளியில்   சுகாதாரமற்ற கழிப்பறைகள்

ஓசூர்,செப்.20- கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் நகரில் உள்ள  காமராஜ் குடியிருப்பு  பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாள்தோறும் ஏராளமானோர் நடைப்பயிற்சி,உடற்பயிற்சிக்கு இங்கு காலை மாலை வந்து செல்கின்றனர். இறகு பந்து, கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுடன் தடகள பயிற்சியும் கொடுத்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள கழிவறைகள் பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமாக உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து கடந்த ஆறு மாதங்களாக மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், இப்பகுதிக்கு வருகை தந்த மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதைத் தொடர்ந்து, பூட்டி வைக்கப்பட்டிருந்த  கழிப்பறைகள் வளாகத்தை பார்வையிட்ட ஆணையர் உடனடியாக சீர் படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தேவனாம்பட்டினத்தில் தூய்மையே  சேவை  விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர், செப்.20 -  கடலூர் மாநகராட்சி சார்பில் தூய்மையே சேவை என்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக கடலூர் தேவனாம்பட்டினத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி, தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் தூய்மை பணி உள்ளிட்டவைகள் நடைபெற்றது. இதில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் பா. தாமரைச்செல்வன், மாநகர ஆணையர் அனு, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள் , சுய உதவி குழுவினர், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்கள்,அங்கன்வாடி, சத்துணவு,சாலை பராமரிப்பு துறை,துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கிருஷ்ணகிரி வட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக மாவட்டத் தலைவர் பி.சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எல்.ஐ.சி. புதிய மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம் 

சென்னை, செப்.20- இந்தியாவின் மிக மூத்த நிதி நிறுவனங்களில் ஒன்றாகிய எல்.ஐ.சி. மியூச்சுவல் ஃபண்ட் உற்பத்தித் துறைக்கான புதிய மியூச்சுவல் ஃபண்டை திறந்த நிலை முதலீட்டு திட்டமாக அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் செப். 20 முதல் அக்டோபர் 4, 2024 வரை முதலீடு செய்யலாம்.    இத்திட்டத்தின் கீழ் யூனிட்டுகள் அக்.11, அன்று ஒதுக்கப்படும். இந்தத் திட்டம் நிஃப்டி இந்தியா உற்பத்தி குறியீட்டுடன் (மொத்த வருவாய் குறியீடு) ஒப்பிடப்படும்.  குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 5,000 மற்றும் அதன் பின்னர் ரூ.1 மடங்குகளில் முதலீடு செய்யலாம். இதில் ஆட்டோ மொபைல், மருந்துகள், ரசாயனம், கனரக பொறியியல் தயாரிப்புகள், உலோகங்கள், கப்பல் கட்டுமானம் மற்றும் பெட்ரோலிய தயாரிப்புகள் போன்ற பல துறைகளில் இந்த நிதி முதலீடு செய்யப்பபடும் என்று எல்ஐசி  மியூச்சுவல் பண்டின் மேலாண் இயக்குநர் ஆர்.கே. ஜா கூறினார்.