districts

img

“மண்சரிவால் பல நாட்கள் போக்குவரத்து முடங்கும் அபாயம்”வத்தல்மலை சாலையோரம் கான்கிரீட் சுவர் அமைக்க வலியுறுத்தல்

- ஜி.லெனின் – தருமபுரி, டிச.9- வத்தல்மலை மலைப்பாதையில் மண் சரிவு ஏற்படும் சமயத்தில் பல நாட்களுக்கு போக்குவரத்து முடக்கு வதால், சாலையோரம் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், வத்தல்மலை யில் சின்னாங்காடு, ஒன்றியங்காடு, பால் சிலம்பு, பெரியூர், நாயக்கனூர் உள்ளிட்ட 13 மலைக்கிராமங்கள் உள் ளன. இக்கிராமங்களில் 5 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். வத்தல்மலை அடிவாரத் தில் இருந்து 13 கி.மீ. மலைப்பாதையை  கடந்தால், மலையின் மேல் பகுதியை அடையலாம். இப்பகுதி மக்கள்  கடந்த 100 ஆண்டுகாலமாக ஒத்தை யடி பாதையில் மலைக்கும், அடிவாரத் திற்கும் சென்று வந்தனர். கடந்த 25  ஆண்டுகாலமாக வத்தல்மலை கிரா மங்களுக்கு சாலை அமைக்க வேண் டுமென பல்வேறு கட்ட போராட்டங் களை நடத்தினர். ஒருகட்டத்தில் மலைகிராம மக்களே ஒன்றிணைந்து மண் சாலை அமைத்தனர். அதன்  பிறகு வத்தல்மலைக்கு அடிவாரத் தில் இருந்து மலையின் மேல் பகுதி  வரை உள்ள பகுதிக்கு கடந்த 11  ஆண்டுகளுக்கு முன்பு, 24 கொண்டை  ஊசி வளைவுகளுடன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

பேருந்து சேவை துவக்கம்

மழைக்காலங்களில் இச்சாலை யில் மண் சரிவு ஏற்பட்டதால், வத்தல் மலைக்கு பேருந்து போக்குவ ரத்தை தொடங்குவதில் காலதாம தம் ஏற்பட்டது. இதனால் வேன்கள், ஜீப்கள் உள்ளிட்ட சிறிய ரக வாக னங்கள் பொதுமக்கள் போக்கு வரத்திற்கு பயன்படுத்தப்பட்டது. அவ் வப்போது சாலை சீரமைப்புப் பணி கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலை யில், கடந்த 2021 ஆம் ஆண்டு செப்.29 ஆம் தேதியன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வத்தல் மலைக்கு நேரில் சென்று, “சாகச சுற்றுலா மையம்” அமைக்கப்படும் என்று அறி வித்தார். இதைத்தொடர்ந்து வத்தல் மலைக்கு செல்லும் மலைப்பாதை யில் 40 இருக்கைகள் கொண்ட அரசு பேருந்து சோதனை ஓட்டம் நடத்தப் பட்டது. தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு  ஆக.13 ஆம் தேதியன்று, தருமபுரி புற நகர் பேருந்து நிலையத்திலிருந்து நான்கு முறை சென்று வரும் வகை யில் வத்தல் மலைக்குக்கு புதிய  பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட் டது. தற்போது வரை வத்தல்மலை பொதுமக்கள் பேருந்து போக்கு வரத்து பயன்படுத்தி வருகின்றனர்.

மழையால் மண்சரிவு

மேலும், சுற்றுலாப் பயணிகள் வத்தல்மலைக்கு சென்று வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந் நிலையில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில், “தமிழ்நாடு அமுதம்”  என்ற பெயரில் ஓட்டல் கட்டப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட் டது. இந்நிலையில், மழைக்காலங்க ளில் வத்தல்மலை பாதையில் உள்ள  4,8,9,18, உள்ளிட்ட கொண்டை ஊசி வளைவுகளில் மழைநீர் அரிப்பால், மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. நடப் பாண்டு  பெய்த கோடை மழைக்கு ஆங் காங்கே மண் சரிவு ஏற்பட்டது. பாதை  சிறிது அகலமாக இருப்பதால், மண்  சரிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படாத வண்ணம் நடந்தேறி உள்ளது. சில  இடங்களில் பெரிய பாறைகள் சாலை யின் ஓரத்தில் உருண்டு விழுந்துள் ளன. பருவமழை காலங்களில் பெரிய  அளவில் மண் சரிவு ஏற்படும் நிலை யில் மலைப்பாதை உள்ளதால், விபத்துகள் ஏற்படா வண்ணம் சாலை யோரத்தில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைத்து, பாதுகாப்பான பயணத் திற்கு வழிவகை செய்ய வேண்டும்  என வத்தல்மலை குடியிருப்பு வாசிக ளும், சுற்றுலாப் பயணிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், தமிழக அரசும், மாவட்ட  நிர்வாகமும் செவி சாய்காத நிலை யில், தற்போது வீசிய பெஞ்சால் புயல்  காரணமாக பெய்த மழையால் வத்தல் மலையின் 24 கொண்டை ஊசி வளை வுகளில், 20 கொண்டை ஊசி வளைவு பாதை முழுவதும் மண் சரிவு ஏற் பட்டுள்ளது. இந்த மண் சரிவால் 5  நாட்களாக போக்குவரத்து துண்டிக் கப்பட்டது. இதனால் மலைவாழ் மக்கள் அடிப்படை தேவைகளின்றி வீடுகளிலேயே முடங்கினர். இரு சக்கர வாகனம் செல்லவே தவித்துவ ரும் நிலையில், ஊராட்சி நிர்வாகம்  சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம்  மலைப்பாதையை சீரமைத்தனர். தர்போது அரசு பேருந்து போக்கு வரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள் ளது. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மலைகிராம மக்க ளின் நலன் கருதி போர்கால அடிப் படையில் மலைப்பாதையை சீர் செய்து, சாலையோரம் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.