districts

img

தவறான சிகிச்சை - மருத்துவர் மீது நடவடிக்கை கோரி மனு

தருமபுரி,ஏப்.5- தவறான சிகிச்சையளித்த மருத்துவர் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி உயிரிழந்த பெண்ணின் கணவர் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், பூணை யானூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் - சூர்யா  தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சூர்யாவிற்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய முடிவு செய்து பையநாய்கன்பட்டி அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் சூர்யாவை அனுமதித்துள்ளார். அங்கு  பரிசோதனை  மேற்கொண்ட மருத்துவர்கள் கடந்த மார்ச்  26 ஆம் தேதியன்று  சூர்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்துள் ளார். ஆனால், அதன்பின்னர் பல மணி நேரமாகியும், சூர்யா விற்கு  மயக்கம் தெளியவில்லை. இதையடுத்து அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலை யில், அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆகவே, எனது மனைவி சூர்யாவுக்கு தவறான சிகிச் சையளித்த பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருத்துவர் மற்றும் பணியாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி உயிரிழந்த சூர்யாவின் கண வர் கோவிந்தராஜ், தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சி னியிடம் புகார் மனு அளித்தார்.