districts

img

தவறான சிகிக்சையால் பெண் மரணம்: மருத்துவர் மீது வழக்குப்பதிய மறுப்பது ஏன்?

திருவண்ணாமலை, மே 20- தனியார் மருத்தவமனையில் மரண மடைந்த பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பணுர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன். இவரது மனைவி ராஜகுமாரிக்கு திருவண்ணாமலையிலுள்ள தனியார் ராஜ் மருத்துவமனையில் 2001 ஆம் ஆண்டு மருத்துவர் கதிரவனால் கர்ப்பப் பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், ராஜகுமாரி சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். மரணமடைந்த ராஜ குமாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை கேட்டு 9 மாதங்களை கடந்தும் இதுவரைக்கும் அந்த தனியார் மருத்துவமனை வழங்க வில்லை. இந்நிலையில், ராஜகுமாரி உடற்கூறு ஆய்வு அறிக்கையை உடனே வழங்க வேண்டும், மருத்துவர் கதிரவன் மீது வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட குடும் பத்திற்கு பாதுகாப்பு நிதியாக 50 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவண்ணாமலை மாவட்டச் செய லாளர் எம். சிவக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.bஜய்சங்கர், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காததால் ஆர்ப்பாட்  டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.