districts

img

சிபிஎம் தருமபுரி மாவட்ட மாநாடு துவங்கியது!

தருமபுரி, டிச.13- மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட மாநாடு, பாலக்கோட்டில் எழுச்சிப் பேரணியியுடன் வெள்ளி யன்று துவங்கியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 24 ஆவது மாநாடு, டிச.13 முதல் 15 ஆம் தேதி வரை பாலக்கோடு நந்தாதாஸ் மஹாலில் நடைபெறுகிறது. இந்நிலையில், மாநாட்டின் முதல் நிகழ்வாக, வெள்ளி யன்று பாலக்கோடு புதூர் மாரியம் மன் கோவில் அருகிலிருந்து துவங்கிய செம்படை பேரணியை மூத்த தலைவர் பி.இளம்பரிதி துவக்கி வைத் தார். மக்கள் நலக் கோரிக்கைகளை எழுப்பிபடியே நடை பெற்ற பேரணி, முக்கிய கடைவீதிகள் வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன் தலைமை வகித்தார். மாவட் டக்குழு உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் வரவேற்றார். மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.சிசுபாலன், இரா.சிந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். முடிவில், பாலக்கோடு வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ் நன்றி கூறினார். தொடர்ந்து, சனி (இன்று), ஞாயிற்றுக் கிழமைகளில் (நாளை) மாநாடு நடைபெறுகிறது.