districts

img

தோழர் பாப்பா உமாநாத் நினைவு தினம் அனுசரிப்பு

தருமபுரி, டிச.17- தோழர் பாப்பா உமாநாத்-தின் நினைவு தினம் செவ்வாயன்று அனு சரிக்கப்பட்டது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், வாச்சாத்தி பாலியல் வன் கொடுமைக்கெதிராக மாநிலம் முழு வதும் பெண்களை அணிதிரட்டி போராட்டம் நடத்திய தோழர் பாப்பா உமாநாத்-தின் 24 ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று தமிழ கம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

 தருமபுரி, செங்கொடிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ. ஜெயா, செயலாளர் ஆர்.மல்லிகா, முன்னாள் செயலாளர் எஸ்.கிரைஸா மேரி, நகரத் தலைவர் சுபா, செயலா ளர் நிர்மலா ராணி, ஒன்றியத் தலை வர் தமிழ்மணி, செயலாளர் எம்.மீனாட்சி, மாவட்ட நிர்வாகிகள் கே. பூபதி, கே.சுசிலா, மங்கை, உஷா, ரங்கநாயகி, மாது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே மாதர் சங்க எலச்சி பாளையம் அலுவலகத்தில் தோழர் பாப்பா உமாநாத்-தின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ் விற்கு, மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜீ.பழனியம்மாள் தலைமை வகித்தார். மாதர் சங்க மேற்கு ஒன்றி யத் தலைவர் லட்சுமி, கிழக்கு ஒன்றி யத் தலைவர் சாந்தி, செயலாளர் மோகனப்பிரியா, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்டக்குழு அலுவ லகத்தில் தோழர் பாப்பா உமாநாத் நினைவேந்தல் நிகழ்வு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலை மையில் செவ்வாயன்று மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணியன், பி.சுந்தரராஜன், நகரச் செயலாளர் வி.பாண்டியன், மாவட்டக்குழு உறுப் பினர் கே.எம்.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம், தாலுகா ஊனாத்திபுதூர், பெருந்துறை, சத்தி, கடம்பூர் மலை ஆகிய இடங்க ளில் படம் வைத்து மலரஞ்சலி செலுத் தப்பட்டது. இதில், மாவட்டச் செய லாளர் பா.லலிதா, மாவட்டப் பொரு ளாளர் எஸ்.கீதா, தாலுகாச் செயலா ளர் கலாமணி, மாவட்டக்குழு உறுப் பினர்கள் எம்.மாதேஸ்வரி, சி.வீரம் மாள், பி.ஜோதி, நகர துணைத்தலை வர் அம்மணியம்மாள், கடம்பூர் தாய ளம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.