சிஐடியு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளன மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன 16- ஆவது மாநில மாநாடு தருமபுரி மாவட்டத்தில் எழுச்சியுடன் துவங்கியது. ஆக. -5,6,7, ஆகிய தேதிகளில் தோழர்கள் என்.குட்டப்பன்,எஸ்.பக்தவச்சலு நினைவரங்கத்தில் (டி.என்.ஏசி, விஜய் ஹாலில்) மாநாடு, நடைபெற்றது.
சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை வகித்தார்.
மாநில பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார்.வேலை அறிக்கை ஸ்தாபன அறிக்கை வாசித்தார்.பொருளாளர் வி.சசிகுமார்,வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.
மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் வி.குப்புசாமி ஆகியோர்
வாழ்த்தி பேசினார்.
மாநாட்டை நிறைவு செய்து சம்மேளன தலைவர் அ.சவுந்திராசன் உரையாற்றினார்.
புதிய நிர்வாகிகள்
இந்த மாநாட்டில், சம்மேளன தலைவராக அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளராக கே.ஆறுமுகநயினார், பொருளாளராக வி.சசிகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.