districts

img

சண்டிகர், உ.பி. மின்வாரிய தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, டிச.10- மின்விநியோக நிறுவனங்களை தனியா ருக்கு விடுவதை எதிர்த்து போராடிவரும் சண் டிகர், உத்தரபிரதேசம் மாநில மின்வாரிய  தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து,  தருமபுரியில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சாரத் துறையை தனியார் மயப்ப டுத்த ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து  வருகிறது.

குறிப்பாக மோடியின் 3.0 ஆட்சி யில் அதானியிடம் ஒப்படைக்க “ஒரே நாடு  ஒரே மின்சாரம்” என்ற கொள்கையை அம லாக்க ஒன்றிய அரசு மாநில மின்வாரியங் களை, குறிப்பாக விநியோகப் பகுதிகளை தனி யாரிடம் கொடுக்க நடவடிக்கை எடுத்து வரு கிறது. அதன்ஒருபகுதியாக சண்டிகர் மற் றும் உத்தரபிரதேசம், தெலுங்கானாவில் மின் வாரியத்தை தனியார்மயப்படுத்த திட்ட மிட்டு செயலாற்றி வருகின்றனர். தெலுங் கானாவில் நடைபெற்ற போராட்டத்தின்  விளைவாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள் ளது.  

மேலும், இந்தியாவில் உள்ள எல்லா  மாநிலங்களும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை  அமலாக்க ஒன்றிய அரசால் நிர்பந்தப்படுத் தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பவர்கிரீட்க்கு சொந்தமான துணை மின் நிலை யங்கள் அனைத்தும் முழுமையாக அவுட் சோர்சிங் விடுவதற்கான நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.  உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா மற்றும் வாரணாசி விநியோக நிறுவ னங்களை தனியார்மயப்படுத்த மாநில பாஜக  அரசும், மோடி தலைமையிலான ஒன்றிய அர சும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனை  எதிர்த்து மின்வாரிய ஊழியர்கள் போராடி  வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும்,  தனியார்மயபடுத்துவதை எதிர்த்தும் செவ் வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், தரு மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் தீ. லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார் சிஐ டியு மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, அண்ணா தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் அன்பழகன், ஏஇஎஸ்யூ மாவட்டச் செயலாளர் விநாயகமூர்த்தி, அம்பேத்கர் சங்க மாவட்டச் செயலாளர் மாதேஸ், ஏஐசி சிடியு மாவட்டச் செயலாளர் சி.முருகன், எம் ளாயீஸ் பெடரேசன் மாவட்டச் செயலாளர் கோகுல் தாஸ், ஐக்கிய சங்க மாவட்டச் செய லாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஐக்கிய சங்க நிர் வாகி ஷாகின்ஷா நன்றி கூறினார்.