தருமபுரி, டிச.14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 24ஆவது மாநாட்டு பொதுக்கூட்டம் வெள்ளியன்று பாலக்கோட்டில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் சிறப்புரையாற்றினார்
\மக்களுககாக அயராது உழைக்கும் கட்சி
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தவித பிரதிபலனும் பார்க்காமல் மக்க ளுக்காக உழைக்கின்ற கட்சி என்பதை நீங்கள் அறிவீர்கள். கட்சி தொடங்கி 100 ஆண்டுகள் கடந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியால் மாநில அளவிலும் அகில இந்திய அளவிலும் பலன் பெற்றவர்கள் ஏராளம்” என்று பெருமிதத்துடன் பெ. சண்முகம் தொடங்கினார்.
தலித் மக்களுக்கான போராட்டம்
அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்டு 50 ஆண்டுகாலம் போராடி வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி இதனை அரசியல் களத்தில் முன்னெ டுத்து வெற்றி பெற்றது. இதன் விளை வாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் ஆயிரக்கணக் கானோர் மருத்துவம், பொறியியல், சட்டப் படிப்பு படித்தும், அரசு வேலை பெற்றும் முன்னேறியுள்ளனர்.
வாச்சாத்தி வழக்கில் வரலாற்று வெற்றி
வாச்சாத்தி வன்கொடுமைக்கு எதிராக நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தி வரலாற்றுத் தீர்ப்பைப் பெற்றது மார்க்சி ஸ்ட் கட்சியின் மகுடமாக ஒளிர்கிறது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 இலட்சம் இழப்பீடும், அவர்களின் குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசுக்குப் பாராட்டு தெரி விக்கும் அதே வேளையில், உயர்நீதி மன்றத் தீர்ப்பின் இதர அம்சங்களையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் விளைநிலங்களை கைய கப்படுத்தி, விவசாயிகளின் அனுமதி யின்றி தனியாருக்கு வழங்கும் நடவ டிக்கைக்கு எதிராக தமிழ்நாடு விவசாயி கள் சங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராடி நிலத்தை மீட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
நீதித்துறை சுதந்திரம் கேள்விக்குறி
“உள்ளூரில் நீதி கிடைக்கவில்லை, காவல்துறையில் நீதி கிடைக்கவில்லை என்று நீதிமன்றம் சென்றால் அங்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளிலும் அனைத்து பிரிவினரையும் முன்னிலைப் படுத்துவதற்கான அணிகள் இருக்கும். ஆனால், நீதிபதிகளுக்கென்றே பாஜக தனி அணி வைத்திருக்கிறது” என்று பாஜகவின் நீதித்துறை ஆதிக்க முயற்சியை கண்டித்தார்.
வன உரிமைச் சட்டம் அமலாக்கத்தில் அலட்சியம்
2006-இல் கொண்டுவரப்பட்ட வன உரிமைச் சட்டம் 17 ஆண்டுகள் கடந்தும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று சாடினார். இச்சட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பேருக்கு பட்டா வழங்க முடியும் என்றபோதிலும், வெறும் 10,000 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியா ளர்கள், அதிகாரிகளின் அலட்சியமே இதற்குக் காரணம் என்றார்.
தருமபுரி மாவட்டத்தில் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. வன உரிமைச் சட்டத்தின் மூலம் மேய்ச்சல் உரிமம், பட்டிபாஸ் உரிமம் வழங்கலாம் என்றபோதிலும், சட்டத்தை அமல்படுத்துவதற்குப் பதிலாக மக்கள் மீது அபராதம், பொய் வழக்குகள் போடப் படுகின்றன. இத்தகைய சட்டவிரோதச் செயல்களை வனத்துறை நிறுத்தா விட்டால், ஆடு மாடுகளுடன் வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப் படும் என எச்சரித்தார்.
மழை பெய்தும் தருமபுரி மாவட்டத் தில் பெரும்பகுதி ஏரிகள் நிரம்பவில்லை. எனவே மழைக் காலங்களில் காவிரி ஆற்றில் ஓடும் உபரி நீரை கால்வாய் மூலம் ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும் என்றார்.
பட்டா கோரி மனு
முன்னதாக, பாலக்கோடு வட்டம் ஜிட்டாண்டு அள்ளி, மகேந்திரமங்கலம், அண்ணாமலை அள்ளி, பிக்கன அள்ளி, ஜக்க சமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் வன நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயி கள், ஒதுக்கப்பட்ட காடுகள் என்ற வரை யறையிலிருந்து விவசாய நிலத்தை விடு வித்து பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பெ. சண்முகத்திடம் மனு அளித்தனர்.