districts

img

வெள்ளை ஈக்கள் தாக்குதலால் பொலிவு இழந்த தென்னை மரங்கள் வாழுமா?

எஸ்.ஆர்.மதுசூதனன் தலைவர், தென்னை விவசாயிகள் சங்கம் இந்தியாவில் 2016 ஆம் ஆண்டிலி ருந்து தென்னை மரங்களில் ரூகோஸ்  சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் உள் து. தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மற்றும்  கேரளாவில் பாலக்காடு பகுதிகளில் முதலில் கண்டறியப்பட்டது. இந்த வெள்ளை ஈக்கள் நாடுமுழுவதும் பரவி  பெருகி வருகிறது. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் அதிக அளவில் பாதிப்பை உருவாக்கியுள்ளது.  விதவிதமான நோய்கள்  இந்த ஈக்கள் அமெரிக்காவில் துவங்கி பரவியதால் ஆரம்பத்தில் அமெரிக்கன் ரூகோஸ் வெள்ளை ஈக் கள் என்று அழைக்கப்பட்டன. இந்த  வெள்ளை ஈக்கள் தென்னை மரங்களில்  இலைகளில் தங்கி சாறு உறிஞ்சி வாழ்கி றது. ஒரு வகை திரவத்தை வெளியிடு கிறது. இதனால் தென்னை ஓலை கீழ்  பகுதி கருப்பு நிறமாக மாறி கடுமையான  பாதிப்புக்குள்ளாகிறது. ஈரீயோபைட்  நோய் தாக்குதல், வேர் வாடல், நோய்  குருத்து அழுகல், ஊசி நோய், பூங் கொத்து கருகுதல், கருந்தலைப் புழுக் கள், கேரளா வாடல் நோய், சிவப்பு கூன்  வண்டு என பல்வேறு நோய் தாக்குதலா லும் தென்னை மரங்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்துள்ளன.  என்ன மாதிரியான பாதிப்பு?  கம்பீரமாக உயர்ந்து நின்ற தென்னை மரங்களின் இலைகளில் கண் ணுக்கு தெரிகிற அளவுக்கு மட்டும் இருக்கும் சின்னஞ்சிறு சுருள் வெள்ளை  ஈக்கள் சாறு உறிஞ்சியும், அரித்தும் வரு கிறது. இதனால் 70 சதவிதம் மரங்கள் காய்ப்பிழந்து விட்டன. ஆண்டுக்கு ஒரு  மரத்திற்கு சராசரியாக 70 காய்கள் கிடைத்து வந்தது. அதை மாற்றி தமிழ் நாட்டு விவசாயிகள் நவீன தொழில் நுட் பங்களை கடைப்பிடித்து உற்பத்தித் திறனை ஒரு மரத்திற்கு 150 காய்களாக  உயர்த்தினார்கள்.  வெள்ளை ஈக்கள் மற்றும் நோய் களை கட்டுப்படுத்த எல்லா வகையிலும்  தோல்வியுற்று மரத்திற்கு சராசரியாக முப்பது காய்களே கிடைக்கிறது. அது வும் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குத லுக்கு முன்பு நன்கு முற்றிய ஒரு தேங் காய் 400 கிராமிலிருந்து 700 கிராம் வரை  எடையில் கிடைத்து வந்தது. 10 ஆண்டுக ளில் மெல்ல மெல்ல வெள்ளை ஈக்கள்  தாக்குதலால் ஒரு தேங்காய் 200 கிராம்  இருந்து 400 கிராம் ஆக எடை குறைந்து விட்டது. மரங்கள் காய்ப்பு இழந்து விட்டதுடன்,காய்களின் எடையும் குறைந்து விட்டது. எடை குறையும் போது தேங்காய் போடுவதற்கும் உரிப்பதற்கும் செலவுகள் கூடுதலாக ஆகிறது. தேங்காயை உடைத்து கொப்பரையாக மாற்றுவதற்கு குறை வான எடை உள்ள காய்கள் பொருத்த மற்றதாக இருக்கிறது. 

விலை உயர்வு யாருக்கானது?

நல்ல விளைச்சலும், உற்பத்தியும்  சிறப்பாக இருந்தபோது ஒன்றிய அர சாங்கம் இறக்குமதி எண்ணெய்கான வரியைக் குறைத்ததால் மூன்று மாத காலத்திற்கு முன்பு வரை 500 கிராம் எடையுள்ள ஒரு தேங்காய் ரூ 15 தான்  விலை கிடைத்தது. இறக்குமதி எண் ணெய்க்கு 22% வரி விதித்ததால் ரூபாய்  30 விலை கிடைக்கிறது இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு எவ்விதப் பய னும் இல்லாமல் போய்விட்டது பல் வேறு நோய்களால் தேங்காய் விளைச் சல் பாதிப்படைந்து எவ்வித பயனும்  அற்ற நிலையில் தென்னை விவசாயி கள் கடுமையான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டுள்ளனர் நோய் கட்டுப்பாடு  சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குத லைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரியமும், தமிழ் நாடு தோட்டக்கலைத் துறையும் பல்வேறு  பரிந்துரைகளை செய்தனர். அவர்கள்  செய்த பரிந்துரையில் வேப்பெண் ணெய் தெளிப்பது, மைதா மாவை நீரில்  கரைத்து தென்னை ஓலையில் படிந் துள்ள கருப்பான படிமானத்தை வெளி யேற்றுவதற்கு இலைகளில் தெளிப் பது, மஞ்சள் காகிதத்தின் மூலம் ஈக்களை இனப்பெருக்கத்தை தடுப்பது,  ஓட்டுண்ணிகள் மூலம் தடுப்பது என்று பரிந்துரைத்தனர். இப்பரிந்துரைகள் எல்லாம் விவசாயிகள் பெரும் பொருட் செலவில் செய்து வந்தனர். ஆனால் எந்த வகையிலும் வெள்ளை ஈக்கள்க ளை கட்டுப்படுத்த முடியவில்லை.வேப் பெண்ணை கட்டுப்படுத்தும் என்றனர்,  வேப்ப மரங்களே வெள்ளை ஈக்களின் தாக்குதால் பாதிக்கப்பட்டு இருப்பதை பரவலாக காண முடிகிறது. இந்த ஈக் கள் பல்கிப் பெருகி வாழை, கொய்யா,  மக்காச்சோளம், காய்கறி பயிர்கள் உட் பட தாக்குதல் நடத்தி பாதிப்பை உரு வாக்கி வருகிறது.

தென்னை வளர்ச்சி வாரியம் எதற்கு?

இந்தியாவில் தென்னை பயிருக் கென்று 50 ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சி வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. அதன் தலைமை அலுவலகம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ளது, மேலும் கர்நா டகா, அசாம், தமிழ்நாடு, பீகார் ஆகிய  மாநிலங்களிலே மண்டல அலுவலகங்க ளும் செயல்பட்டு வருகின்றன. மாநில  வாரியாகவும் 8 இடங்களில் ஆராய்ச்சி நிலையங்களும், அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆந்திர பிரதேசம், அசாம், கர்நாடகா, கேரளா,  ஒடிஸா, பிஹார், சத்தீஸ்கர், மகா ராஷ்டிரா, தமிழ்நாடு, திரிபுரா மற்றும்  மேற்கு வங்காளம் உட்பட பதினோரு  இடங்களில் ஆராய்ச்சி நிலையங்களை  வைத்துள்ளது. அதில் நாற்று உற்பத்தி  செய்து கொடுப்பது, நோய் தடுப்புக் கான ஆராய்ச்சிகள் செய்வது என்று இயங்கி வந்தது.   நாடு முழுவதும் தென்னைக்கு என்று பிரத்யேகமான ஒரு ஏற்பாட்டை ஒன்றிய அரசாங்கம் செய்து வைத்தி ருக்கிறது. வளர்ச்சி வாரியம் மூலம் பல் வேறு ஆய்வுகள் செய்து தென்னை உற் பத்தியில், தென்னை வளர்ச்சியில் இரண்டாம் இடத்திலும் தேங்காய் உற் பத்தியில் இந்தியா உலகத்தில் முதல் இடத்திற்கு வளர்ந்துள்ளது. ஆனால், தென்னை வளர்ச்சி வாரிய ஆராய்ச்சி நிலையத்தில் ஒன்று திருப் பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட் டத்தில் 102 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் பயிர்  செய்துள்ள தென்னை மரங்களே கடு மையான சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கு தலால் பாதிப்படைந்துள்ளது.  இந்தியாவில் லட்சக்கணக்கான தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய வளர்ச்சி வாரியம், மோடி  அரசின் நிர்வாக திறமையின்மையால்  எவ்வித ஆராய்ச்சி நோய் தடுப்பு முறை களை கண்டுபிடிக்காமல் சாதனைகள் என்று சொல்லி வருகிறது. தென்னை வளர்ச்சி வாரியமும் தமிழ்நாடு அரசின்  தோட்டக்கலைத் துறையும் வேளாண்மை பல்கலைக்கழகமும் 10  ஆண்டுகளாக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மேற்கண்ட கட்டுப்பாட்டு முறைகளை யே திரும்ப திரும்ப சொல்கின்றனர். 

என்னதான் செய்யலாம்?

விவசாயிகள் தென்னை மரங்க ளுக்கு நோய்களை கட்டுப்படுத்த வேர்  மூலம் இரசாயன மருந்துகளை செலுத் துகின்றனர். அதில் தடை செய்ய வேண் டிய மருந்தான மேனோகிராப் டோபாஸ் மற்றும் காண்டாப் பூச்சி மருந் துகளை பயன்படுத்துகின்றனர். அதற் கும் கட்டுப்படாமல் மருந்துகளை அதிக  அளவில் செலுத்துகின்றனர். ரசாயன மருந்துகளால் அங்கிருந்து வெளி யேறும் வெள்ளை ஈக்கள் இயற்கை முறையிலே கட்டுப்பாடு செய்யும் விவ சாயிகளின் தென்னை மரங்களை நோக் கியும், மற்ற தாவரங்களிலும் ஊடுருவி பல்கிப் பெருகிவிட்டன. வெள்ளை ஈக் கள் தாக்குதலை கட்டுப்படுத்த தென்னை மரங்களில் நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு உரிய உர மேலாண்மை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். தென்னை மரங்கள் பொலிவு இழந்து காட்சியளிக்கின்றன. எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வெள்ளை ஈக்களும் மற்றும் பல்வேறு  நோய்களும் தாக்குதல் நடத்தி இருக் கும் காலத்தில் பொள்ளாச்சியை தென்னை சார் பொருளாதாரம் மண்ட லம் என்று அறிவித்து இரண்டு கோடி நிதி  ஒதுக்கியுள்ளோம் என்று மார் தட்டி சாதனை பேசுகின்றனர்.  தமிழ்நாட்டில் 5 லட்சம் ஹெக் டேர்க்கு மேல் பயிர் செய்துள்ள தென்னை விவசாயத்தைப் பாதுகாக்க வும், 19 மாநிலங்களில் பரவி கிடக்கும்  தென்னை விவசாயிகளின் ஒன்றுபட்ட  குரலாய் ரூக்கோஸ் சுருள் வெள்ளை  ஈக்களை கட்டுப்படுத்த புதிய மருந் துகளை கண்டுபிடிக்க வேண்டும். தென்னை பயிர் செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் ஒருங்கி ணைந்த கட்டுப்பாட்டு முறைகளை செயல்படுத்த வேண்டும் தென்னை சாகுபடி முறையில் மாற்றங்கள் செய்ய  ஆய்வு செய்து அதை அமல்படுத்த வேண்டும். ஒரு தனி தென்னை மரம்  பட்டுப் போனாலும் பயிர் காப்பீடு கிடைக்கும் வகையில் பயிர் காப்பீடு திட் டத்தை செயல்படுத்த வேண்டும் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கோருகிறோம்.