districts

img

சர்வதேச மகளிர் தின விழா: உற்சாக கொண்டாட்டம்

கோவை, மார்ச் 8– சர்வதேச மகளிர் தினத்தை முன் னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மகளிர் தின  விழா சனியன்று கோவை  தாமஸ் கிளப் பில் நடைபெற்றது. மகளிர் துணைக் குழு அமைப்பாளர் வி. ஆர். சாந்தாமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழா வில் “யோகமும் பெண்ணின் பெருமை யும்”, “பெண்களும் கண்களும்” உள் ளிட்ட தலைப்புகளில் சிறப்புரைகள் நடைபெற்றன. எஸ்.சாரதாமணி தேவி  வரவேற்புரையாற்றினார். இதில், ஜே.ஆர். சுப்ரமணியன், அனுஷா வெங் கட்டராமன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். இதில், மாவட்டத் தலைவர் எஸ்.மதன், செயலாளர் கே.அருணகிரி, தமு எகச மாநிலக்குழு உறுப்பினர் வெ. மைதிலி, சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத் தலை வர் கே.பழனிச்சாமி ஆகியோர் உரை யாற்றினர். அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க மாநில துணைத் தலைவர் என்.அரங்கநாதன் நிறைவுரையாற்றி னார். முடிவில், கே.ஜானகி நன்றி கூறி னார். முன்னதாக, இந்நிகழ்வில் வாசன் ஐ கேர் சார்பில் இலவச கண் பரிசோ தனை முகாம் நடைபெற்றது.  பெண் ஊடகவியலாளர்களுக்கு விருது கோவை, ஹோப்ஸ் பகுதியிலுள்ள  கிளஸ்டர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ஊடகத்துறையில் சிறந்து  விளங்கும் பெண் ஊடகவியலாளர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தி  ஹிந்து நாளிதழ் துணை ஆசிரியர் ஜெஸ்ஸி, ஒளிப்பதிவாளர் சுகன்யா, புதிய தலைமுறை செய்தியாளர் ஐஸ் வர்யா உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மகளிர் மாரத்தான் போட்டி

சூலூர் காவல்துறை சார்பில் மகளிர் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அவி நாசி சாலையில் உள்ள டெக்கத் தலா னில் தொடங்கிய 10 கி.மீ. மாரத்தான் போட்டியை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். கல் லூரி மாணவிகள், பெண் காவல் அதிகா ரிகள் மற்றும் பெண் காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் கள் வழங்கப்பட்டன. உழைக்கும் பெண் கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஈரோட்டில் உழைக்கும் பெண்கள் சந் திப்பு இயக்கம் நடைபெற்றது. ஒருங்கி ணைப்பாளர் பி. ஸ்ரீதேவி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் சம வேலைக்கு சம ஊதியம், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் 33% இட  ஒதுக்கீடு, பணியிடங்கள் மற்றும் வீடு களுக்கு திரும்பும் வரை பெண்களுக்கு  பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன. இந்நிகழ்வில், சிஐடியு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வங்கி, ரயில் மற்றும் கட்டுமான தொழி லாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

மனித சங்கிலி, கருத்தரங்கம்

ஈரோட்டில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி மற்றும் கருத் தரங்கம் நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மனித சங்கிலியில் பெண்கள் பாதுகாப்பு வலி யுறுத்தப்பட்டது. அரசு ஊழியர் சங்க  அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங் கிற்கு ஆர். சுமதி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மு. சீனிவா சன் சிறப்புரையாற்றினார். முன்னதாக, மாவட்டத் தலைவர் எஸ்.ரமேஷ் துவக்க வுரையாற்றினார். செயலாளர் ச.விஜய மனோகரன், வருவாய்த்துறை அலுவ லர் சங்க மாநில துணைத் தலைவர் கு. குமரேசன், மாவட்ட துணைத் தலைவர் கவிதா உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், எம்.சந்திரமௌலி நன்றி கூறி னார். இதேபோன்று, சித்தோடு அரசு  பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்து சாமி 10,552 பயனாளிகளுக்கு ரூ. 80.23  கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார்.

தருமபுரி

பெண்களுக்கு கண்ணியமான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண் டும் என வலியுறுத்தி, சிஐடியு உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், சிஐடியு தருமபுரி மாவட்டக் குழு அலுவலகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட கன்வீனர் சி. கவிதா தலைமை வகித்தார். முதலாளித் துவம் வீழ்த்தப்பட வேண்டும் ஏன்? என்ற தலைப்பில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், ‘வாக்கு அரசியலும், வர்க்க  அரசியலும்’ என்ற தலைப்பில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, ‘பெண் களும் இட ஒதுகீடும்’ என்ற தலைப்பில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி. கலாவதி, ‘இந்து மதமும் பெண்களும்’ என்ற தலைப்பில் சி.அங்கம்மாள், ‘விடு தலைப் போரில் பெண்கள் ஆளுமை கள்’ என்ற தலைப்பில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம். லில்லிபுஷ்பம் ஆகியோர் கருத்துரை யாற்றினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தருமபுரி நகரக்குழு சார் பில், சர்வதேச மகளிர் தினம் தருமபுரி, செங்கொடிபுரத்தில் கொண்டாடப்பட் டது. இந்நிகழ்ச்சிக்கு, மாதர் சங்க நகரச் செயலாளர் எஸ்.நிர்மலாராணி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாதர் சங்க மாவட்டத் தலை வர் ஏ.ஜெயா, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.லில்லி புஷ்பம், மாவட்டத் தலைவர் எஸ்.ராஜம்மாள், மாதர் சங்க நிர்வாகிகள் வள்ளி, ஜானகி, அலமேலு உட்பட பலர்  கலந்து கொண்டனர். மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற இயக்கத்திற்கு, அரசு ஊழியர் மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை, பொருளாளர் அன்பழகன், சத் துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலா ளர் பெ.மகேஸ்வரி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் சா.இளங்குமரன், மாவட்டத் தலைவர் முகமது இலியாஸ், வேளாண் துறை அமைச்சு பணியாளர் சங்க மாநி லச் செயலாளர் ஜெயவேல், விடுதி காப் பாளர் சங்க மாவட்டத் தலைவர் தின மணி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

சேலம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், மக ளிர் தின கருத்தரங்கம், சேலம் சிவில் இன்ஜினியர்ஸ் கட்டிடத்தில் நடைபெற் றது. மாவட்டத் தலைவர் கா.செந்தில் தலைமை வகித்தார். மகளிர் துணைக் குழு அமைப்பாளர் வே.காயத்ரி வர வேற்றார். மகளிர் துணைக்குழு ஒருங்கி ணைப்பாளர் லோ.பிரேமகுமாரி முன் னிலை வகித்தார். ஊராட்சிகள் உதவி இயக்குநர் சங்கமித்திரை, உதவி திட்ட அலுவலர் உமா நந்தினி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மகளிர் தினம் ஏன்? என்பது குறித்து பட்டதாரி ஆசி ரியை ச.கவிதா கருத்துரையாற்றினார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ந.திருவேரங்கன், செயலாளர் ஜான் ஆஸ்டின், பொருளாளர் வடிவேல், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் பு.சுரேஷ், மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.