districts

img

லஞ்சத்தில் ஊறி திளைக்கும் உடுமலை ஆர்டிஒ அலுவலகம்

உடுமலை, அக்.22 - லஞ்சத்திற்கு மட்டுமே முக்கி யத்துவம் தரும் உடுமலை வட்டார போக்குவரத்து அதிகாரிகளை கண் டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உடுமலை நகரக்குழு சார்பில்  வட்டார போக்குவரத்து அலுவல கத்தின் (எலையமுத்தூர் பிரிவு) அரு கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. உடுமலையில் செயல்படும் வட் டார போக்குவரத்து அலுவலகத்தை உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா பொதுமக்கள் பயன்ப டுத்தி வருகிறார்கள். இந்த அலுவல கத்தில் போக்குவரத்து அலுவலர்,  ஆய்வாளர் மற்றும் கண்காணிப்பா ளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊழி யர்கள் வேலை செய்து வருகின்ற னர். இந்நிலையில், ஓட்டுநர் உரிமம்,  போக்குவரத்து உரிமம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் அரசு நிர் ணயம் செய்த தொகையை விட அதிக தொகை பொது மக்களிடம் அதிகாரிகள் வாங்குகிறார்கள். லஞ் சமாக கூடுதல் பணம் தர மறுக்கும்  பொதுமக்கள் மற்றும் ஒட்டுநர்களை திட்டமிட்டு அதிகாரிகள் பலி வாங்கு கிறார்கள். போக்குவரத்து அலுவல கத்தில் அரசு நிர்ணயம் செய்த தொகையை வெளிப்படையாக அறி விக்க வேண்டும். சட்டத்தை மீறி லஞ் சம் கேட்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியு றுத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து கடந்த 14ஆம் தேதி பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்சியின் சார்பில் போக்கு வரத்து அலுவலகத்தின் முன்பு தட்டி  வைக்கபட்டது. ஆனால் அந்தத் தட்டி  அகற்றப்பட்டு அலுவலக வளா கத்தில் வைக்கப்பட்டிருந்தது. தட்டியை அகற்றியவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என உடு மலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 19 ஆம் தேதி மீண்டும் தட்டி எலைய முத்தூர் பிரிவில் வைக்கப்பட்டது.  இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை நகரச்  செயலாளர் தண்டபாணி தலைமை யில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பொது மக்களிடம் அரசு நிர்ணயம் செய்த தொகையை  விட அதிகமான தொகையை சட்டவி ரோதமாக வாங்கும் அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கம்  எழுப்பப்பட்டன. இதில், மார்க்சிஸ்ட்  கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கள் பஞ்சலிங்கம், கல்யாணராமன், நகரக்குழு உறுப்பினர்கள் உட்பட திர ளானோர் கலந்து கொண்டு கண்டன  முழக்கம் எழுப்பினர்.