உடுமலை, மார்ச் 8 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு இயல் - இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான தோழர் நந்தலாலா, உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவ ரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வித மாக, உடுமலைப்பேட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை உடு மலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. ஆசிரியர் செல்லதுரை தலைமை யில் நடைபெற்ற புகழஞ்சலிக் கூட்டத் தில், சங்கத்தின் நிர்வாகிகள் துரைய ரசன், சுதா சுப்பிரமணியம், தோழன் ராஜா, சிவக்குமார், இளையபாரதி, தெய்வானை மற்றும் சிஐடியு சங்கத்தின் விஸ்வநாதன், ரங்கநாதன், கனகராஜ், ஜஹாங்கீர், செந்தில்குமார், பட்டீஸ்வ ரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.