districts

img

63 பேரின் சொத்து மத்திய பட்ஜெட்டை விட அதிகம்

வெறும் 1 சதவிகிதம் பேரிடம் குவிந்திருக்கும் நாட்டின் 95 சதவிகித செல்வம்

‘ஆக்ஸ்பாம்’ நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்

புதுதில்லி, ஜன.21- இந்தியாவில் உள்ள ஒரு சத விகித பெரும்பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பானது, 70 சதவிகித மக்க ளின் சொத்து மதிப்பை விட, நான்கு மடங்கு அதிகம் என்று ‘ஆக்ஸ்பாம்’ (Oxfam) நிறுவனம் தனது ஆய்வறிக்கை யில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள கோடீஸ்வ ரர்களின் சொத்து மதிப்பானது ஓராண் டுக்கு மத்திய அரசு போடும் பட்ஜெட் மதிப்பை விட அதிகம் என்றும் ‘ஆக்ஸ்பாம்’ கூறியுள்ளது. அதாவது, 2018-19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ. 24 லட்சத்து 42 ஆயிரத்து 200 கோடி யாகும். ஆனால், இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் உள்ள 63 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு, பட்ஜெட் தொகையைக் காட்டி லும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum - WEF) 50-ஆவது உச்சி மாநாடு, டாவோஸில் துவங்கியுள்ளது. முன்னதாக, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள மக்களின் பொருளாதார நிலை குறித்த, தனது ஆய்வறிக்கையை, ‘டைம் டு கேர்’ என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம் நிறு வனம் வெளியிட்டுள்ளது. அதில், உலக பொருளாதார நிலைமை குறித்தும், இந்திய நிலைமை குறித்தும் கூறப்பட்டி ருப்பதாவது: உலகில் மொத்தம் உள்ள 2,153 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பா னது, 460 கோடி மக்களின் சொத்து மதிப்பை விட அதிகமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர் களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இவர்களின் சொத்து மதிப்பு சரிந்த போதி லும், உலகம் முழுவதும் ஏழை - பணக் காரர் இடையிலான விகிதம் அதி கரித்துள்ளது.

சர்வதேச அளவில் கடந்த 30 ஆண்டு களில் ஏற்றத் தாழ்வு விகிதம் கணிசமாக குறைந்து வந்துள்ளது என்றாலும், ஊதிய விகிதத்தில் அதிக ஏற்றத்தாழ்வு காணப் படுகிறது. ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் ஒரு மாத ஊதி யத்தைச் சம்பாதிப்பதற்கு, வீட்டுப் பணிப் பெண் ஒருவர் 22 ஆயிரத்து 277 ஆண்டு கள் உழைக்க வேண்டும். ஒரு சிஇஓ-வின் ஒரு விநாடி சம்பளம் 106 ரூபாய். அவர் 10 நிமிடத்தில் சம்பா திக்கும் சம்பளம்தான் ஓராண்டில் ஒரு வீட்டுப் பணிப்பெண்ணின் ஊதியமாக உள்ளது.

இந்தியாவில் ஒரு நாளைக்கு பெண் களும், சிறுமியரும் ஊதியமின்றி பணி யாற்றும் நேரம் 326 கோடி மணி நேர மாகும். இதை அவர்கள் ஊதியமாக ஈட்டி யிருந்தால் ரூ. 19 லட்சம் கோடியாக இருந்திருக்கும். இது இந்தியாவில் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகையை விட 20 மடங்கு அதிக மாகும். 2019-ஆம் ஆண்டு கல்விக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை ரூ. 93 ஆயிரம் கோடியாகும்.  நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசு முதலீடு 2 சதவிகி தம். இதன் மூலம் 1 கோடியே 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி யிருக்க முடியும் மற்றும் 2018-இல் 1 கோடியே 10 லட்சம் வேலையிழப்பை ஈடு கட்டியிருக்க முடியும். பணக்காரர்கள் தாங்கள் செலுத்தும் வரியை, 0.5 சதவிகிதம் அளவிற்கு 10 ஆண்டுகளுக்கு கூடுதலாக செலுத்தி னால் போதும், அதன்மூலம் கல்வி, சுகா தாரம் உள்ளிட்ட துறைகளில் 11 கோடியே 70 லட்சம் வேலை வாய்ப்புகளை உரு வாக்கலாம். அதேபோல முதியோர், குழந்தை நலன், கல்வி, சுகாதாரம் உள் ளிட்டவற்றுக்கு கூடுதலாகச் செலவிட முடியும். இந்தியாவின் அதிக சொத்து படைத்த பணக்காரர்களில் ஒரு சத விகிதத்தினர், நாட்டிலுள்ள 70 சத விகித ஏழைகள் கொண்டுள்ள பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாக வைத் துள்ளனர். அதாவது, ஏழ்மையான 95.3 கோடிப் பேரின் சொத்து மதிப்பை விட செல்வந்தர்களின் சொத்து அதிகமாக உள்ளது. இவ்வாறு ‘ஆக்ஸ்பாம்’ நிறுவனம் கூறியுள்ளது.

‘கிரெடிட் சூயிஸ் ரிசர்ச் இன்ஸ்டிடி யூட்டின் குளோபல் வெல்த் டேட்டாபுக் 2019’ மற்றும் ‘போர்ப்ஸின் 2019 பில்லி யனர்கள் பட்டியல்’ உள்ளிட்ட சமீபத்திய தரவு ஆதாரங்களின் அடிப்படையில், தங்களின் இந்த ஆய்வு முடிவுகள் வெளி யிடப்பட்டு உள்ளதாகவும், ஆக்ஸ்பாம் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைமைச் செயலதிகாரி யான அமிதாப் பெஹர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “இந்தியாவில் சமத்துவ மின்மையைக் குறைப்பதற்கான கொள் கைகள் வலுவாக இல்லை” என்றும், “அவ்வாறு இல்லாதவரை, இதுபோன்ற பொருளாதார இடைவெளிகள் நீடிக் கும்” என்றும் தெரிவித்துள்ளார். “பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் 12.5 பில்லியன் மணி நேர ஊதியம் பெறாத பராமரிப்புப் பணி களில் ஈடுபடுகிறார்கள். இது உலகளா விய பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு குறைந்தது 10.8 டிரில்லியன் டாலர் பங்க ளிப்பு ஆகும். இது உலகளாவிய தொழில்நுட்பத் துறையின் வருவாயில் மூன்று மடங்கு அதிகமாகும். குழந்தைகள் மற்றும் வயதான வர்கள் சமைப்பதற்கும், சுத்தம் செய்வ தற்கும், பராமரிப்பதற்கும் பில்லி யன் கணக்கான மணிநேரம் செலவிடு கிறார்கள். ஊதியம் பெறாத பராமரிப்பு வேலை என்பது நமது பொருளாதா ரங்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களின் சக்கரங்களை நகர்த்தும் ‘மறைக்கப்பட்ட இயந்திரம்’ ஆகும்.  உலகளாவிய கணக்கெடுப்பின்படி, உலகின் 22 பணக்கார ஆண்களுக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எல்லா பெண்களையும் விட அதிக செல்வம் உள்ளது” என்றும் பெஹர் கூறியுள்ளார்.