கோவை, ஆக. 23- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்படுவது மாணவர் களிடையே பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்வதற் கென தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றது. இதேபோல, அரசு பள் ளிகளில் பயிலும், ஏழை எளிய மாண வர்கள் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட ‘தமிழ்ப் புதல்வன்’ திட் டத்தை கோவையில் தமிழ்நாடு முத லமைச்சர் துவக்கிவைத்தார். இத் திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள், பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இத் திட்டத்தின் மூலம் சுமார் மூன்று இலட்சம் கல்லூரி மாணவர்கள் பய னடைவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தி னால் பயனடைந்த மாணவர்கள் பெரும் வரவேற்பை தெரிவித்துள் ளனர். கோவை அரசு கல்லூரி மாண வர் சரவணகுமார் கூறுகையில், அரசு கலைக்கல்லூரியில் இளங் கலை இரண்டாம் ஆண்டு அரசியல் அறிவியல் படிக்கிறேன். என்னு டைய குடும்பம் ஏழ்மையானது. என் னுடைய அப்பா கூலி வேலைக்கு செல்கிறார்கள். கஷ்டப்பட்டுதான் என்னை படிக்க வைக்கின்றார்கள். இந்த சூழ்நிலையில் என்னுடைய படிப்பு செலவுகள், புத்தகம் வாங் குவது, தேர்வு கட்டணம் உள்ளிட்ட வைகளுக்காக வீட்டை எதிர்பார்க் காமல், மாலை நேரத்தில் கல்லூரி முடிந்தபிறகு பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டு, அதில் கிடைக் கும் வருமானத்தை வைத்து என் னுடைய கல்லூரிக்கான செலவு களை நானே கவனித்துகொண்டு, படித்துவந்தேன். வேலை முடிந்து இரவு வெகுநேரம் கழித்து வருவ தால் என்னுடைய படிப்பில் என் னால் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. இந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாடு அரசு தமிழ்ப் புதல்வன் திட்டத் தின் மூலம் மாதம் ரூ.1000 கிடைக் கின்றது. இந்த தொகையை கொண்டு என்னுடைய படிப்புச் செலவினை நானே பார்த்துக் கொள்வேன். பகுதிநேர வேலை யினை விட்டுவிட்டு இனிமேல் என் னுடைய படிப்பில் முழு கவனம் செலுத்த போகிறேன். இத்திட்டம் என்னைப்போன்றவர்களுக்கு வரப்பிரசாதம் என்றார். இதேபோன்று, பிஷப் அம்ப் ரோஸ் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர் ஜேக் பெர்னன்டஸ் கூறுகையில், நான் இரண்டாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் படிக்கிறேன். கஷ் டப்படும் எங்கள் குடும்பம், எங்க அப்பா ஊர் ஊராக போய் வேலை செய்தால்தான் அவருக்கு சம்ப ளம் கிடைக்கும். என்னை படிக்க வைக்கிறதே மிகப்பெரிய கஷ்டம் தான். இருந்தாலும் அவங்க என்னை ஒரு தனியார் கல்லூரி யில் சேர்த்து படிக்க வைக்கிறாங்க. தேர்வு கட்டணம் உள்ளிட்டவற்றை வீட்டில் அடிக்கடி கேட்பதற்கே எனக்கு மிக சங்கடமாக இருக்கும். எங்கள் நிலைமையை உணர்ந்து தான் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை கொண்டு வந்ததாக கருதுகிறேன். இப்போது எனக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையினை கொண்டு, என்னுடைய படிப்புக்கு தேவை யான நோட்டு, புத்தகம், ஸ்டேன சரி பொருட்கள், பேருந்து பயண கட்டணம் உள்ளிட்ட படிப்புக்கு தேவையான செலவுகளை என் னால் பார்த்துக்கொள்ளமுடியும். எனக்கும் என்னைப்போன்றவர் களுக்கும் இந்த திட்டம் பேரூதவி யாக இருக்கிறது என்றார். தொகுப்பு ஆ.செந்தில் அண்ணா செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கோவை