ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான கூடைப்பந்து தொடரை நடத்தி வருகிறது.நடப்பாண்டுக்கான 15-வது கூடைப்பந்து போட்டி சனியன்று தொடங்கி மே 5-ஆம் தேதி வரை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி திடல் மற்றும் நேரு மைதானத்தில் நடைபெறுகிறது.ஆடவர் பிரிவில் 67 அணிகளும், மகளிர் பிரிவில் 20 அணிகள் என மொத்தம் 87 அணிகள்பங்கேற்கின்றன. மொத்த பரிசுத் தொகை ரூ.2 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.40 ஆயிரமும், 2-வது இடத்துக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும், 4-வது இடத்துக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.இந்த தொடர் ‘லீக்’ மற்றும் ‘நாக்-அவுட்’ முறையில் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.