தாராபுரம், மே 12 -தாராபுரத்தில் கோடைகால கூடைப்பந்து பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தாராபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உள்ள கூடைப்பந்து திடலில்கோடை கால கூடைப்பந்து பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாம் இளைஞர் கூடைப்பந்து கழகம் சார்பில் நடைபெறுகிறது. இதில் 12 வயது மேற்பட்ட சிறுவர்களுக்கு அடிப்படை கூடைப்பந்து பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி முகாம் 10 ஆம் தேதி தொடங்கி 23ந் தேதி வரை தினந்தோறும் காலை 6.30 மணிமுதல் 8.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரையிலும் நடைபெறுகிறது. இப்பயிற்சியை மாநில அளவிலான பயிற்சியாளர்கள் அளிக்கின்றனர். இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என இளைஞர் கூடைப்பந்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.