கோவை, மார்ச் 23- காந்திபுரம் பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல் பாடுகளை தடுக்கும் வகையில் திடீரென சோதனையில் ஈடு பட்டனர். கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தர வின் பேரில், மாநகரில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், சட்ட விரோத செயல்பாடுகளை தடுக் கும் வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையத் தில் போலீசார் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டம், காந்தி புரம் மத்திய பேருந்து நிலையம், உள்ளூர் பேருந்து நிலையத்தில் உதவி ஆணையர் கனேசன் மேற்பார்வை யில், காட்டூர் ஆய்வாளர் சரவணன் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட போலீசார் ஞாயிறன்று திடீர் சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிலையத்தில் செயல் பட்டு வரும் கடைகளிலும், பயணிகளிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பேருந்துகளில் ஏறி சந்தேகிக்கும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது வட மாநில இளைஞர் ஒருவர் குட்கா புகையிலைப் பொருட்களை வைத்திருந்த நிலை யில், அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.