districts

கோவையில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்

கோவை. ஜன.25 – கோவையில் இரண்டாம் கட்டமாக கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட சுகா தாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுகாதார பணியாளர்க ளுக்கு கடந்த ஜன.16-ஆம் தேதி முதல் கொரோனா நோய்த் தடுப்பூசிகள் போடப் பட்டு வருகின்றன. கோவையில் முதல் கட்ட மாக தடுப்பூசி செலுத்தி கொள்ள 58 ஆயி ரம் பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ள னர். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை,  மேட்டுப்பாளை யம் அரசு மருத்துவமனை, சீதாலட்சுமி நகர் நல மையம், தாளியூர் ஆரம்ப சுகாதார நிலை யம் ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி செலுத்தப் படுகிறது.  

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 42 ஆயி ரத்து 400 டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள் ளது. இதுவரை தடுப்பூசி போட்டவர்க ளுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. தற்போது இரண்டாம் கட்ட மாக செலுத்த வேண்டிய தடுப்பூசிகளின் டோஸ்கள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.