districts

img

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு: போராட்டம் நடத்த மக்கள் முடிவு

மேட்டுப்பாளையம், ஜூலை 9- காரமடை நகராட்சிக்குட்பட்ட கரி யமலை பகுதியில் கல்குவாரி அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக ஊர் கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அருகே உள்ள காரமடை நகராட்சிக்கு உட்பட்ட எத்தப்பன் நகர் என்னும் பகுதியில் ஏராளமான குடியி ருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கரி யமலை பகுதியில் புதியதாக தனி ஒருவருக்கு கல்குவாரி அமைக்க கனிம வளத்துறை சார்பில் அனு மதி அளித்துள்ளதாக கூறப்படுகி றது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கரியமலையின் மேல் பகுதியில் கல் குவாரி அமைக்கும் கட்டுமான பணி களை சம்பந்தப்பட்ட நபர்கள் தற் போது தொடங்கியுள்ளனர். இங்கு புதிய கல்குவாரி அமைக்கப்பட்டு பாறைகளை உடைக்க வெடிகள் வைக்கப்பட்டால், இம்மலையை சுற் றிலும் உள்ள எத்தப்பன் நகர், கோட தாசனூர், அம்பேத்கர் நகர், ராம் நகர், டி.ஆர்.எஸ் நகர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள குடியிருப்பு வீடுகள் சேதமாவ தோடு, நிலத்தடி நீரோட்டம் மாறி விவ சாயமே செய்ய இயலாத நிலை ஏற் படும். மேலும், இம்மலை மற்றும் இதனை சுற்றியுள்ள இடங்களில் வன விலங்குகள் ஊருக்குள் நுழையும் ஆபத்தான நிலை உருவாகும். இந்நிலையில், சுற்றுச்சூழலை பாழடிக்கும் புதிய கல்குவாரி குறித்து கரியமலையை சுற்றியுள்ள ஊர்க ளைச் சேர்ந்த மக்கள் எத்தப்பன் நகர் பகுதியில் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் ஊர் பொதுமக்கள், காரமடை நக ராட்சி பகுதியைச் சேர்ந்த முக்கிய பிர முகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பிரச்சனை குறித்து விவாதித்து கல்குவாரி மற்றும் கிரா வல் குவாரி அமைக்க வழங்கபட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இயற்கை கனிம வளங்கள் சுரண்டபடுவதை தடுக்கும் வகையில் ஏற்கனவே வழங்கிய அனு மதியை அதிகாரிகள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லை யெனில் புதிய கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட் டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது.