திருச்சிராப்பள்ளி, ஏப்,28-தமிழ்நாடு அரசு அனைத்து துறைஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் செந்தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மத்திய மாநிலஅரசு ஓய்வு பெற்றோர் கூட்டமைப்புதலைவர் சிராஜூதீன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் அகவிலைப்படியை 3 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் புருஷோத்தமன், மாவட்ட இணை செயலாளர் முருகேன், துணைத் தலைவர்கள் சுந்தர்ராஜன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். துணைத் தலைவர் குருநாதன் நன்றி கூறினார். கூட்டத்தில் இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், ஆசிய போட்டியில் பதக்கம்வென்ற கோமதி, சித்ரா ஆகியோருக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.