பெரம்பலூர், ஏப்.6-
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குழு பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் துறைமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை தலைமைவகித்தார். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளரும், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குழு பொறுப்பாளருமான எம்.ஜெயசீலன் சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயற்குழு எஸ்.அகஸ்டின், எ.கலையரசி, வட்டச் செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம், மற்றும் நிர்வாகிகள் ஆர்.முருகேசன், பி.முத்துசாமி, பி.கிருஷ்ணசாமி, எ.கணேசன், ஆட்டோ சங்கம் சி.சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.வரும் ஏப்.9-ம் தேதி சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதால் திராளாக பங்கேற்பது. 10, 11-ம் தேதிகளில் வெண்மனி கலைக்குழுவுடன் பெரம்பலூர் ஆலத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பது உள்ளிட்டவை தீர்மானிக்கப்பட்டது.