districts

img

மார்க்சிஸ்ட் கட்சி போராட்ட அறிவிப்பு எதிரொலி உடனடியாக சாலையை செப்பனிட்ட அதிகாரிகள்

திருப்பூர், நவ. 4 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்ட  அறிவிப்பு செய்த நிலையில், திருப்பூர் மாந கராட்சி அதிகாரிகள் பழுதான சாலையை உட னடியாக செப்பனிடும் பணியைத் தொடங் கினர். திருப்பூர் மாநகராட்சி 1ஆவது வார்டுக்கு  உட்பட்ட இந்திரா நகர் மெயின் ரோடு பழைய  ரேசன் கடை முதல் ஆரஞ்ச் பேக்கரி வரை  பழுதடைந்து குண்டும், குழியுமாக இருந்தது.  கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்நிலை நீடித்தாலும் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக மழைக் காலத் தில் மழைநீர் தேங்கி தொற்று நோய் பரவும்  நிலை உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக செப்பனிட வலியுறுத்தி திங்களன்று நாற்று  நடும் போராட்டம் நடத்தப் போவதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. 1 ஆவது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர், நெச வாளர் காலனி மார்க்சிஸ்ட் கட்சி கிளைகள் இந்த போராட்டத்தை அறிவித்திருந்தன. மார்க்சிஸ்ட் கட்சியினர்  போராட்டத்திற் குத் தயாரான நிலையில் திங்களன்று காலை  மாநகராட்சி முதல் மண்டல இளநிலைப் பொறியாளர் பிரபாகரன் தலைமையில் அதி காரிகள் சம்பவ இடத்துக்கு வந்து குண்டும்,  குழியுமான இந்திரா நகர் பிரதான சாலை யைச் செப்பனிடும் பணியைத் தொடங்கி னர். மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட அறி விப்பைத் தொடர்ந்து சாலையைச் செப்பனி டும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற் கொண்டதால், நாற்று நடும் போராட்டத்தைக் கைவிடுவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப் பன் கூறினார்.