districts

கொலை வழக்கு - வழக்கறிஞர் உட்பட மூவருக்கு இரட்டை ஆயுள்

கோவை, நவ.30-  கோவையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் உட்பட மூவருக்கு இரட்டை ஆயுள் தண்டயை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த அம் மாசை என்ற பெண் கடந்த 2011 ம் ஆண்டு மாயமா னார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நிலையில், கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேல், அவரது கூட்டா ளிகளுடன்  சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேலின் மனைவியான மோகனா என்பவர் ஓடிசாவில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்து தப்பியதும், அதுதொடர்பாக ஓடிசா வில் மோகனா மீது 5 வழக்குகள் பதிவாகி இருந்த நிலை யில், அவரை காப்பாற்ற ஈ.டி.ராஜவேல் முயற்சி கொண்டதும் தெரியவந்தது.  இந்த நிலையில் சொத்து விவகாரம் தொடர்பாக தன்னிடம் வந்த அம்மாசை என்ற பெண்ணை, தனது உதவியாளர் பொன்ராஜ், பழனிச்சாமி ஆகியோர் உத வியுடன் வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேல் கொலை செய் துள்ளார். இதன்பின் தனது மனைவி மோகனா உயிரி ழந்து விட்டதாக கூறி, அம்மாசையின் உடலை காட்டி மாநகராட்சியில் இறப்பு சான்றிதழை பெற்று அவர் மீது ஒடிசாவில் நிலுவையில் இருந்த வழக்குகளை முடி வுக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2013 ஆம் ஆண்டு ஈ.டி.ராஜவேலு, அவரது மனைவி மோகனா, ஓட்டுநர் பழனிச்சாமி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.  இந்த வழக்கு கோவை 5 ஆவது கூடுதல் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திங்களன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர் ஈ.டி.ராஜ வேல், அவரது மனைவி மோகனா மற்றும் ஓட்டுனர் பழ னிச்சாமி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கோவை மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் தீர்ப்பளித்தார். மேலும், கொலை செய்யபட்ட அம்மாசை குடும்பத்தி னருக்கு ரூ.1.20 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.