districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விடுமுறை நாட்களில் அதிகமான போலீசார் ரோந்து

கோவை மாநகர காவல் ஆணையர் பேட்டி கோவை, அக்.25- தீபாவளி பண்டிகையையொட்டி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்கும் அதிகமான போலீசார் ஈடுபட உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்ற  சம்பவங்களை தடுப்பதற்கும் போக்கு வரத்துக்காகவும் பல்வேறு நடவடிக்கை களை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்த பகுதிகளை அதிகமாக கண்டறிந்து, வாகனங்கள் நெரிசல் நிறைந்த பகுதிகளில் வராமல் இருப்பதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை நாட்களில் அதிகமான காவலர்கள் பாது காப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீபாவளி சம்பந்தமாக தற்பொழுது வரை  எந்த ஒரு குற்ற சம்பவங்களும் நடைபெற வில்லை. பட்டாசு கடைகளும் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது. லைசன்ஸ் இல் லாமல் ஆன்லைன் பட்டாசு விற்பனை செயல் படுவது தடை செய்யப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து காவலர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு நாளைக்கு 350  காவலர்களும், அது தவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் காவலர்களும் பணி யில் இருக்கின்றனர், என்றார்.

.ஏற்காட்டில் 250 ரப்பர் மரக்கன்றுகள் நடவு

சேலம், அக்.25- வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் ஏற் காட்டில் 250 ரப்பர் மரக்கன்றுகள் நடவு செய் யப்பட்டன. சேர்வராயன் மலைப்பகுதியில் விவசாயி களின் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில், ஏற்காடு சேர்வ ராயன் மலையில் ரப்பர் மரப்பயிர்களை அறி முகப்படுத்த புதிய முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். கேரள மாநில ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்காடு தோட் டக்கலை ஆராய்ச்சி நிலையப் பண்ணை வளாகத்தில் முதன்முதலாக 250 ரப்பர் மரக் கன்றுகளை நடவு செய்தன. இதுகுறித்து இந்திய ரப்பர் வாரிய ஆராய்ச்சி இணை இயக்குநர் முகமது சாதிக் கூறுகையில், இம் மரங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு பயன்தர தொடங்கும். ஒரு ஹெக்டேருக்கு சுமார் ரூ.2  லட்சம் வரை லாபம் கிடைக்கும். ரப்பர் மரத் துக்கு ஏற்காடு சேர்வராயன் மலை உகந்த இட மாகவும், இம்மலைப் பகுதியின் உயரம், தட்ப வெப்ப நிலை ரப்பர் சாகுபடிக்கு ஏற்றதாகவும்  உள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில், முதன்மை விஞ்ஞானி சூரியகுமார், ஏற்காடு  தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலை வர் மாலதி, இணை பேராசிரியர்கள் சண்முக சுந்தரம், செந்தில்குமார், சாராபர்வின் பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் குடிநீர்

கே.என்.நேரு உறுதி! தருமபுரி, அக்.25- கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 2 ஆம் கட்டப் பணிகள் நிறைவடைந்தவுடன், தருமபுரி முழுவதும் ஒகேனக்கல் குடிநீர் வழங்கப் படும், என அமைச்சர் கே.என்.நேரு உறுதி யளித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய  பேருந்து நிலைய திறப்பு விழா வியாழனன்று மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன் பாட்டுக்குத் திறந்து வைத்தனர். இதன்பின் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தமிழ் நாட்டில் 44 பேரூராட்சிகளில் ரூ.18.14 கோடி யில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப் பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப் பட்டுள்ளன. 74 பேரூராட்சிகளில் ரூ.157.10 கோடியில் அங்காடி, வாரச்சந்தைகள், 391  குளங்கள் ஆகியவை ரூ.191.92 கோடி செல வில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நகராட்சித் துறைக்கு வழங்கப்பட் டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ரூ.8 ஆயி ரம் கோடியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், புளோரைடு குறைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறவுள்ளன. இத்திட்டத்தைச் செயல்படுத்தும்போது தரும புரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் முழுமையாக வழங்கப்படும், என் றார். இவ்விழாவில் பல்வேறு துறைகள் சார் பில் மொத்தம் 751 பயனாளிகளுக்கு ரூ. 4.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டன. தொடர்ந்து பென்னாகரம் பேரூராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், பூங்கா, வாரச் சந்தை உள்ளிட்டவற்றை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில், தரும புரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்கள் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்ப சேகரன், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட மேலாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி உட் பட பலர் கலந்து கொண்டனர்.

பஞ்சு குடோனில் தீ

சேலம், அக்.25- கொண்டலாம்பட்டி அருகே பஞ்சு குடோனில் ஏற் பட்ட தீ விபத்தால், பல லட் சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையா கின. சேலம் மாவட்டம், கொண் டலாம்பட்டி ரவுண்டானா அருகே தனியாருக்கு சொந் தமான பஞ்சு குடோன் உள் ளது. இந்நிலையில், புத னன்று நள்ளிரவு 11 மணிக்கு, குடோனிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கொண்டலாம்பட்டி காவல்  துறையினர் மற்றும் செவ்வா பேட்டை தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் அளித்த னர். அதன்பேரில் சம்பவ இடத் துக்கு மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை  அணைத்தனர். இவ்விபத் தில் பல லட்சம் ரூபாய் மதிப் பிலான பஞ்சுகள் தீக்கிரை யாகின.

பீகாருக்கு சிறப்பு ரயில் இயக்கம்

சேலம், அக்.25- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவையிலி ருந்து பீகார் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட வுள்ளது. கோவையிலிருந்து சனி யன்று (இன்று) முதல் நவ.16 ஆம் தேதி வரை சனிக்கிழ மைகளில் காலை 11.50 மணிக் குப் புறப்படும் கோவை -  பரெளனி சிறப்பு ரயில்  (எண்:06055), திங்கள்கிழமை களில் பிற்பகல் 2.30 மணிக்கு பரெளனி நிலையத்தைச் சென்றடையும். மறுமார்க்கத் தில் பரௌனியில் இருந்து  அக்.29 ஆம் தேதி முதல் நவ.19 ஆம் தேதி வரை வியாழக் கிழமைகளில் இரவு 11.45 மணிக்குப் புறப்படும் பரௌனி - கோவை சிறப்பு ரயில் (எண்:06056), வெள்ளிக் கிழமைகளில் காலை 3.45  மணிக்கு கோவை நிலையத் தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு கைவிட்டாலும் அறிவியல் இயக்கம் முன்னெடுக்கிறது! பாதுகாப்பான நீர் மேலாண்மை பற்றி குழந்தைகள் அறிவியல் மாநாடு

திருப்பூர், அக். 25 - ஒன்றிய அரசின் சார்பில்  பள்ளி  குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மத்திய அரசு கைவிட்டு  விட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை கணித அறிவி யல் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் குழந்தைகள் அறிவி யல் மாநாட்டை நடத்துவதற்கு அறி விப்பை வெளியிட்டுள்ளது. 1993ஆம் ஆண்டு தொடங்கி 31  ஆண்டுகளாக மத்திய அரசின் சார் பில் நாடு முழுவதும் 17 வயது வரை யிலான பள்ளி செல்லும் மற்றும் செல்லாத சிறப்பு குழந்தைகள் என  அனைவருக்குமான தேசிய குழந் தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வந்தது. இதில் ஏராளமான சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு மாணவர்கள் மூலமாக ஆய்வு கட் டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு தீர்வு  காணப்பட்டது. ஆனால், 2023ம் ஆண்டு தேசிய குழந்தைகள் அறிவி யல் மாநாடு மற்றும் தேசிய விஞ்ஞா னிகள் மாநாட்டை ஒன்றிய அரசு நடத் தாமல் கைவிட்டுவிட்டது. 2024-25ம்  ஆண்டுக்கான தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாட்டிற்கான அறி விப்பையும் வெளியிடாமல் இருக் கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அறிவி யல் இயக்கம், தமிழ்நாடு அளவில்  குழந்தைகள் அறிவியல் மாநாட்டை இந்த ஆண்டு நடத்து வது என கடந்த செப்டம்பர் மாதம்  விழுப்புரத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்தது.  இந்த ஆண்டிற்கான கருப்பொ ருளாக “நீடித்த பாதுகாப்பான நீர்  மேலாண்மை” என்பதை அறிவி யல் இயக்கம் அறிவித்துள்ளது. இதன் உப தலைப்புகளாக “நீர்  சூழலும் பாதுகாப்பும்”, “நீர் சார்ந்த  பொது சுகாதாரமும், மருத்துவ மும்”, “நீர் சார்ந்த நோய்கள்”, “நீர்  அனைவருக்குமானது”, “நீர் பாது காப்புக்கான பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்ப யுக்திகள்” ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் குழந்தைகள் ஆய்வு செய்ய உள்ளனர்.  இதைத் தொடர்ந்து  தற்போது  39 மாவட்டங்களில் இந்நிகழ்வுக் கான ஒருங்கிணைப்புக் குழுவை  ஏற்படுத்தி வழிகாட்டி ஆசிரியருக் கான பயிற்சியை நடத்தி வருகிறது.  திருப்பூர் மாவட்ட அளவில் சுப் பையா சென்ட்ரல் சிபிஎஸ்சி பள்ளி யில் வியாழனன்று இப்பயிற்சி நடை பெற்றது. இந்த பயிற்சியின் முதற் கட்டமாக 80க்கும் மேற்பட்ட பள்ளிக ளில் இருந்து ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட் டில் மாணவர்கள் தங்களது கட்டு ரைகளை சமர்ப்பிக்க ஆசிரியர்க ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள் ளது. இந்த பயிற்சியில் மாநில ஒருங் கிணைப்பாளர் தியாகராஜன், மாநி லச் செயலாளர் வி.ராமமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடரா ஜன், மாவட்ட கல்வி ஒருங்கி ணைப்பாளர்கள் ஆ.ஈஸ்வரன், கவிதா ஆகியோர் பங்கு பெற்று பயிற்சி அளித்தனர். சுப்பையா சென்ட்ரல் பள்ளியின் தாளாளர் சுகு மாறன் வாழ்த்திப் பேசினர். அறிவி யல் இயக்கத்தின் மாவட்டச் செய லாளர் கௌரிசங்கர் நன்றி கூறி னார்.

13.50 சதவீத போனஸ் வழங்க உடன்பாடு

13.50 சதவீத போனஸ் வழங்க உடன்பாடு அவிநாசி, அக். 25 - அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு இந்த  ஆண்டு 13.50 சதவீதம் போனஸ் வழங்குவது என இருதரப்பு  பேச்சுவார்த்தையில் புதன்கிழமை ஒப்பந்தம் ஏற்பட்டது. உற் பத்தியாளர் சங்கம் தரப்பில் முத்துச்சாமி, சம்பத், தொழிற்சங் கங்கள் சார்பில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேள னத்தின் மாநிலத் தலைவர் முத்துச்சாமி, சிஐடியு விசைத் தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பழனிச் சாமி,  ஏஐடியூசி சண்முகம், கனகராஜ் உட்பட பங்கேற்ற னர்.

நெல்லியாலம் நகராட்சி அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

உதகை, அக்.25- பந்தலூர், நெல்லியாலம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச  ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு, நக ராட்சித் தலைவர் சிவகாமியிடமிருந்து கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 37 ஆயிரத்து 500 பணத்தை பறிமுதல் செய்த னர்.  நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத் தில் பல்வேறு முறைகேடு நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு  தகவல் வந்தது. அதை தொடர்ந்து திடீரென நகராட்சி அலுவ லகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜெயகுமார் தலைமை யில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வெள்ளியன்று ஆய்வு  மேற்கொண்டனர். இதில் நகராட்சித் தலைவர் சிவகாமி மற் றும் துணைத்தலைவர் நாகராஜ் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.3,37,500 பணம் பறிமுதல் செய்யப்பட் டது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை ஆட்சியரின் ஊழியர் விரோதப்போக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.25- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோதப் போக்கினை கண்டித்து, சேலத்தில் வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களுடன் முதல்வர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் மற்றும் முதல்வரின் முகவரி உள்ளிட்ட திட்டங்களின் மூலம் பெறப்படும் கோரிக்கை மனுக்களை நிறைவேற்ற உரிய கால  அவகாசம் மற்றும் திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி  ஒதுக்கீடு செய்ய வேண்டும். பெயர் மாற்ற விதி திருத்த அரசா ணையை உடனடியாக வெளியிட வேண்டும். தொடர் ஊழியர் விரோதப்போக்கில் ஈடுபட்டு வரும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தி னர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி தலைமை வகித் தார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அருள் பிரகாஷ்,  பொருளாளர் அகிலன், துணைத் தலைவர் முருகபூபதி உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

மஞ்சள் ஏலத்தில் மோசடி: விவசாயிகள் குற்றச்சாட்டு

ஈரோடு, அக்.25- கோபி கூட்டுறவு விற்பனை சங் கத்தில் நடைபெறும் மஞ்சள் ஏலத் தில் பல்வேறு மோசடிகள் நடப்ப தாக விவசாயிகள் குற்றம்சாட்டி யுள்ளனர்.  ஈரோடு மாவட்ட வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன் கரா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்த குமார் மற்றும் பல்வேறு துறை அதி காரிகள் பங்கேற்றனர்.  இக்கூட்டத் தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க பிர திநிதிகள் பல்வேறு கோரிக்கை மனுக் களை அளித்து பேசினர். அப்போது, பருவ மழை தவறியதால் கீழ்பவானி பாசன நடவுப் பணிகள் தாமதமாகி யுள்ளது. ஆகவே ஜனவரி மாதம் வரை பாசனத்திற்கு நீர்திறப்பை நீட் டிக்க வேண்டும். ஜவ்வரிசி மற்றும்  ஸ்டார்ச் மாவு கலப்படம் காரணமாக மரவள்ளிக்கிழங்கின் விலை வீழ்ச்சி  அடைந்துள்ளது. எனவே, ஆலைக ளில் தொடர் ஆய்வு நடத்தி கலப் படத்தை தடுக்க வேண்டும். மரவள் ளிக்கு உரிய விலை கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதே போன்று, கோபி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலத்தில் பல் வேறு குளறுபடிகள், மோசடிகள் நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட் டினர். இதனைக்கேட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும், விவ சாயிகள் பேசுகையில், அதிக மழை  காரணமாக கரும்பு, மஞ்சள் உள் ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கீழ்பவானி பாசனப் பகுதியில் மழை  பெய்யும் இடங்களில் நீர் திறப்பை  குறைக்க வேண்டும். குரங்கன் ஓடை யில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைக ளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர். இறுதியில் மாவட்ட ஆட்சியர் பேசிய தாவது: ஈரோடு மாவட்டத்தில் பட்டா  மாறுதல் தொடர்பாக மாதம் 3ஆயிரம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இதில் 74 விழுக்காட்டின ருக்கு பட்டா மாறுதல் செய்யப்படு கிறது. பல்வேறு காரணங்களால் 26  விழுக்காட்டினர் கோரிக்கை நிராக ரிக்கப்படுகிறது. மனு நிராகரிக்கப்பட் டால் அதற்கான காரணமும் தெரி விக்கப்படுகிறது. அத்துடன் ஆட்சே பனை இருப்பின் வருவாய் கோட் டாட்சியிடம் மேல் முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தெரு  நாய் பிரச்சனையைக் கட்டுப்படுத்து வதில் கடுமையான நிபந்தனைகளை விதிக்கப்படுகிறது. இந்த விதிமுறை களை தளர்த்தும் வகையில், தெரு  நாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப் பட வாய்ப்பு ஏற்படும், என்றார்.

சூடு பிடிக்கும் கொடநாடு கொலை வழக்கு

உதகை, அக்.25- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, மீண்டும் சூடு பிடித்துள்ளது. உதகையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத் தில் நடைபெற்று வந்தது, இந்நிலையில், மாவட்ட அமர்வு நீதி மன்ற நீதிபதி அப்துல் காதர் பணியிடை மாற்றம் செய்யப் பட்டுள்ளதால் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது.முன்னதாக, கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்ற வாளியாக கருதப்படும் சயான், வாளையார் மனோஜ் ஆகி யோர் நேரில் ஆஜராகினார். இதைப்போல் அரசு தரப்பு வழக் கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜ ராகினர். மேலும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் சிபிசி ஐடி போலீசார் நேரில் ஆஜராகி இருந்தனர். நீதிபதி லிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் இன்டர் போல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது நடைபெற்று வரும் புலன் விசாரணை மற்றும் சாட்சிகளிடம் விசாரித்து வருவது குறித்தும் நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கின் விசாரணையை எதிர்வரும் நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தர விட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான்,சிபிசிஐடி போலீசார் வழக்கின் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், இண்டர் போல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரி வித்தார்.

அணைகள் நிலவரம் (வெள்ளிக்கிழமை)

பவானிசாகர் அணை
நீர்மட்டம்:90.56/105அடி
நீர்வரத்து:2891கனஅடி
நீர்திறப்பு:1500கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:71.35/72அடி
நீர்வரத்து:626கனஅடி
நீர்திறப்பு:1132கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:159.58/160அடி
நீர்வரத்து:441.66கனஅடி
நீர்திறப்பு:840.61கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:119.10/120அடி
நீர்வரத்து:473கனஅடி
நீர்திறப்பு:514கனஅடி
திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:56.29/60அடி 
நீர்வரத்து:856கனஅடி
நீர்திறப்பு:32கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்:86.72/90அடி
நீர்வரத்து:596கனஅடி
நீர்திறப்பு:393கனஅடி