districts

img

மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் முடிவை கைவிடுக

தருமபுரி, அக்.25- மின்வாரியத்தை தனியார்மய மாக்கும் முடிவை கண்டித்து, சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மாநில மின்வாரியங்களை தனி யார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். உற்பத்தியை யும், விநியோகத்தையும் அம்பானி, அதானியிடம் அடகு வைக்கக்கூடாது. இந்திய மக்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளை நிர்பந்திக்கக் கூடாது. மின்வாரியத்தில் காலியாக  உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தை பல கூறுகளாக பிரிக்க போடப்பட்ட அரசாணை எண்: 6,7 மற்றும் 32யை திரும்பப்பெற வேண் டும். முத்தரப்பு ஒப்பந்தத்திலுள்ள அநீதிகளை களைந்து, அரசு உத்தர வாதத்துடன் கூடிய புதிய ஒப்பந் தத்தை ஏற்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு போனஸ் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாவட்ட  துணைத்தலைவர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பி.ஜீவா, மாவட்டச் செய லாளர் தீ.லெனின் மகேந்திரன், துணைத்தலைவர்கள் பி.சிவக்கு மார், ஆறுமுகம், மாவட்ட இணைச் செயலாளர்கள் முருகேசன், ஜெக நாதன், பொன்னுதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். பொறியாளர் அமைப்பின் மாவட் டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட் டச் செயலாளர் ஜி.பி.விஜயன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். முடிவில், மின் ஊழியர் சங்க மாவட்டப் பொரு ளாளர் ஆர்.திம்மராயன் நன்றி கூறி னார். ஈரோடு ஈரோடு மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தலை வர் எம்.ஆர்.பெரியசாமி தலைமை  வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் எச்.ஸ்ரீராம் சிறப்புரையாற்றி னார். கிளைச் செயலாளர் பி.ஸ்ரீதேவி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் திரளான மின் ஊழியர்கள் பங் கேற்றனர்.