districts

img

வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும்; தலித் கிறிஸ்தவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும்

திருவில்லிபுத்தூர், அக்.25 - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி கிறிஸ்தவர்களின் வழி பாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும், தலித் கிறிஸ்தவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகள் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் திருவில்லி புத்தூரில் நடைபெற்ற கிறிஸ்தவ மக்கள் கோரிக்கை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. திருவில்லிபுத்தூரில் (அக்.23) புதனன்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு மாவட்டச் செயலாளர் ஏ.மரியடேவிட் தலைமை தாங்கினார். ஆர்.ராஜமணிக்கம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் எஸ்.கே.ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.ஞானசெல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் எம்.நாகூர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

அனுமதி மறுப்பதா?

மாநாட்டை துவக்கி வைத்து மாநில செயலாளர் எம்.தாமஸ்சேவியர் பேசு கையில், “ஆலயங்கள் கட்டுவதற்கும், புதுப்பிக்கவும் கூட மாவட்ட நிர்வாகத்தி டம் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஆலயங்கள் கட்ட பிற சமயத்தினர் ஆட்சேபனை தெரிவிப்பதில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தால் கூட அனுமதி மறுக்கின்றனர்” என்றார். அருப்புக்கோட்டையில் நடை பெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் குறித்தும், சிவகாசி ஆலய வளாகத்தில் இயேசு பற்றிய விளக்கப் படம் ஒளி பரப்பப்பட்ட போது ஏற்பட்ட பிரச்சனை கள் குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். மாவட்ட காவல்துறை யினர், பிரச்சனைகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போக்கை அவர்  கண்டித்தார். முக்கிய சாதனை சிறுபான்மை மக்களுக்கு பாது காப்பு அரணாக இருந்து வருவது தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவே என மாவட்டத் தலை வர் எஸ்.கே.ராஜேந்திரன் தெரி வித்தார். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது இந்த நலக்குழு வின் முக்கிய சாதனை என்றும், கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்திற்கு குறி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி, பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில் 43 ஆயிரம் குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி னார். சென்னையிலிருந்து ஆயுதங்கள் கப்பல் மூலம் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவதையும், சர்வதேச அமைப்புகளின் கண்டனங்களையும் எடுத்துரைத்தார். தமிழகம் மதச்சார் பற்ற மாநிலமாக இருந்த போதிலும், இந்து பிளவுவாதம் திட்டமிட்டு பரப்பப் படுவதையும், அதனால் சிறுபான்மை யினருக்கு எதிரான பாரபட்சம் அதி கரித்துள்ளதையும் விமர்சித்தார். மேலும், இந்து சமயத்தில் விவேகானந்தர்  அற்புதமான தலைவர், அடிமைகளாக கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றவும், பெண் அடிமைத்தனத்தை எதிர்த்தும் குரல் கொடுத்துள்ளார். இராமலிங்க வள்ளலார், சமத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். ராஜாராம்மோகன்ராய், சாதிகளை எதிர்த்து போராடியுள்ளார். ஆனால், பாஜகவினர் அப்படியல்ல. பெண்களுக்கு கல்வி கொடுத்தது கிறிஸ்தவம். கல்விக்காக ஏராளமான பள்ளிகளைக் கட்டிக் கொடுத்தது கிறிஸ்தவ மதம். இதனை நாம் சாதாரண மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார். அமைப்பின் மாநில பொதுச் செய லாளர் எம்.ராமகிருஷ்ணன், ராஜேந்திர சச்சார் குழு அறிக்கையை மேற்கோள் காட்டி, இஸ்லாமியர்களின் கல்வி நிலை 51 விழுக்காடாக குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டினார். மதம் மாறிய பௌத்தர்கள், சீக்கியர்கள் பட்டியலினத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தலித் கிறிஸ்தவர்கள் சேர்க்கப்படாததை விமர்சித்தார். கிறிஸ்தவர்களின் வழிபாட்டு உரிமை களை பாதுகாக்க காவல்துறை சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாநாட்டை கத்தோலிக்க திருச்சபை யின் மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் நிறைவுசெய் தார். மாவட்ட துணைத் தலைவர்கள் ஏ.பாக்கியராஜ், ஜெ.ஜே.சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர் ஐ.ஜெயா, மாவட்ட பொருளாளர் எல்.தஸ்தஹீர்அஹமது உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்றனர்.