தருமபுரி, டிச.22- தருமபுரியில் சிறுபான்மையினர் தின விழா மற்றும் கோவையில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சிறுபான்மை நலத்துறை, தருமபுரி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் அனைந் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், கிறிஸ்மஸ் விழா மற்றும் சிறுபான்மையினர் தின விழா சனியன்று நடைபெற் றது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை, தமிழ்நாடு அரசு மாநில சிறப்பு பிரதிநிதி ஏ.இலி யாஸ் தலைமை வகித்தார். முஸ்லிம் உதவும் சங்க கெளரவ தலைவர் ஜனாப். யாரப்சாஹெப் வரவேற்றார். முஸ்லிம் மகளிர் உதவி சங்க பொறுப்பாளர் ஜீலான், தருமபுரி மாவட்ட அரசு காஜியார் மெளலானா முப்தி, ஹாஜி, எம்.பலே கரீம், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த திருச்சபைகள் கூட் டமைப்பின் பேராயர் எம்.பிலிப், ஜனநாயக மாதர் சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.மல்லிகா, முன்னாள் செயலாளர் எஸ். கிரைஸாமேரி, ஒன்றியச் செயலாளர் தமிழ்மணி, சிறு பான்மை நலக்குழு மாவட்டப் பொறுப்பாளர்கள் தமிழ் வாணன், எம்.ஏ.சிக்கந்தர் சாஹெப், ஏ.சிராஜுதீன், இளம் பிறை சுலைமான், நிஜாமுதீன், ஜே. கலாம், ஏ. அலாவு தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முஸ்லிம் மகளிர் உத வும் சங்க இணைச்செயலாளர் முகமது இஸ்மாயில் நன்றி கூறினார். கோவை இதேபோன்று, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஞாயிறன்று கோவை இரத்தினபுரி மினி ஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது. என்.ஆர்.முருகேசன் தலைமை யில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில், பகுதி செயலாளர் ஜி. குழந்தைராஜ் முன்னிலை வகித்தார். ‘சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்டெடுப்போம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில துணைத் தலைவர் ஜி. ஆனந்தன் சிறப்புரையாற்றினார். சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளர் ஏ.சாதிக் பாட்சா துவக்கரைவு யாற்றினார். மாவட்டத் தலைவர் ஜெரோம் ரோட்ரிக்ஸ் கருத் துரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக ரத்தினபுரி ஆர்.சி.சர்ச். ஃபாதர் ரபேல், ஆர்எஸ்எப் பெந்தகோஸ்தே மூத்த தலைவர் சாம் புஷ்பராஜ் கலந்து கொண்டனர். முடிவில் சிறுபான்மை மக்கள் நலக்குழு பொருளாளர் ஜெய் மேன்யல் நன்றி கூறி னார்.
