districts

img

பள்ளி வாகனம் மோதியதில் தந்தை மகன் உயிரிழப்பு!

கடலூர், டிச.22- கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதிய தில், இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை மகன் உயிரிழந்தனர். பெண்ணாடம் அடுத்துள்ள திரு மலை அகரம் கிராமத்தை வசித்து வந்தவர்கள் மதி (55), அவரது மகன் மதன் (23). இவர்கள் இருவரும் ஸ்கூட்டி யில் பெண்ணாடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் திசை யில் வந்த தனியார் பள்ளி வாகனம் ஸ்கூட்டி மீது மோதியதில் மதி மற்றும் மதன் இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பள்ளி வாகனம் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பள்ளி வாகனத்தை ஓட்டி வந்த பெண்ணாடம் அடுத்துள்ள சோழன் நகர் பகுதியைச் சேர்ந்த வேலு (45) லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தை கண்டித்து இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற விருத்தாச்சலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனை வரையும் கலந்து போக செய்தனர். பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.