திருப்பூர், ஜன.17- திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், வடசின்னாரிபா ளையம் தடுப்பணை மற்றும் காங்கே யம் வட்டம் உத்தமபாளையம் கிரா மம் வட்டமலைக்கரை ஓடை நீர்தேக் கத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன் வியாழனன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம், பரம்பிக்கு ளம் ஆழியாறு திட்டம். திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிர தான கால்வாய் சரகம் 86 கி.மீ. இல் உள்ள கள்ளிபாளையம் நீர் வெளிப் போக்கி வழியாக திருப்பூர் வட்டம், உத்தமபாளையம் கிராமத்திலுள்ள வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத் திற்கு ஜன.8 ஆம் தேதி முதல் ஜன.18 ஆம் தேதி வரை 10 நாட்களில் 240 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரி ழப்பு உட்பட) பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக் காக, அணையின் நீரிருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து, தேவைக் கேற்ப, தண்ணீர் திறந்து விட அனு மதி அளித்து அரசு ஆணையிட்டது. வட்டமலைக்கரை அணைக்கு, விவ சாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த, 8 ஆம் தேதி கள்ளிபாளையம் மதகில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டது. இந்நிலையில், வட்டமலைக் கரை அணைக்கு தண்ணீர் வந்தது. வட்டமலை ஓடை வழியோர கிராம மக்கள் நீர்வழிப்பாதை அருகே தண் ணீரிக்கு மலர் துாவி வரவேற்றனர். இந்த தண்ணீர் திறப்பால் கட்டப் பட்ட தடுப்பணைகள் நிரம்பியுள்ளன. இதனால், வட்டமலை ஓடையின் இரு கரைகளிலும், 50 கி.மீ., துாரம் வரை, 58 மேற்பட்ட வழியோர கிரா மங்களில் நிலத்தடி நீர்மட்டம் உய ரும். மேலும், விவசாயத்திற்கு நீர் ஆதாரம் மேம்படும். இந்நிலை யில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் தினம் வடசின்னாரிபா ளையம், உத்தமபாளையம் வட்டம லைகரை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டு, நீர் வரத்தினை மலர்த்தூவி வரவேற் றார். இந்த ஆய்வின் போது, திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத்தலை வர் இல.பத்மநாபன், உதவி செயற் பொறியாளர் (நீர்வளத்துறை) சீனிவ ாசன். உதவிப் பொறியாளர் கோகுல், வட்டாட்சியர் மோகனன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.