districts

img

வகுப்புவாதத்தை முறியடிப்போம்; மதசார்பின்மையை பாதுகாப்போம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப்.27- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அகில இந்திய கோரிக்கை நாளை  முன்னிட்டு, வகுப்புவாதத்தை முறியடிப் போம், மதசார்பின்னையை பாதுகாக்க வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டதலைவர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். இதில் தற்காலிக ஒப்பந்த மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அனை வரையும் வரன் முறைப்படுத்த வேண்டும்.  அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணி யிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை கலைக்க வேண்டும். தேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்கள் அனைவரையும் பழைய  பயனளிப்பு ஓய்வூதிய  திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை  ஊதிய மாற்றத்தை உறுதி செய்யவேண்டும்.  வகுப்புவாத சக்திகளை முறியடித்து, மதச்சார்பின்மையைபாதுகாக்கவேண்டும்.  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொது விநியோக முறையை  பலப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், பொருளாளர் கே. புகழேந்தி, மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் பி.எஸ்.இளவேனில், ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ருத்ரையன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.ராமஜெயம், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன், மாவட்டச்செயலாளர் சி.காவேரி, நில அளவைத்துறை ஒன்றிப் பின் மாநில துணைத் தலைவர் அண்ணா  குபேரன், சுகாதாரத்துறை அலுவலர் சங்க  மாவட்டத் தலைவர் நாகராஜ்,பொது நூலகத்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.