districts

பால் உற்பத்தியாளர்களுக்கு நிறுத்தப்பட்ட ஊக்கத் தொகையை நிலுவையுடன் வழங்க வலியுறுத்தல்

திருப்பூர், அக்.25 - தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்மு தல் செய்யும் பாலுக்கு வழங்கி வந்த ஊக்கத்தொகையை நிறுத்தாமல் மீண் டும் வழங்க வேண்டும் என்று விவசாயி கள் வலியுறுத்தினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தலைமையில் வெள்ளி யன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். குமார் கூறுகையில், திருப்பூர் மாவட்டத் தில் அதிகமாக உருவாகியுள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளின் கழிவு களை, தெருவோர நாய்கள் உண்டு பழ கிவிட்டதால், இறைச்சி கழிவுகள் கிடைக்காத சமயங்களில் பல கிலோ மீட் டர் தொலைவிற்குச் சென்று விவசாயிக ளுக்கு சொந்தமான ஆடு, மாடு, கன்று குட்டிகளை கடித்து குதறிக் கொன்று விடுகின்றன. இதனால், விவசாயிகள் மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். எனினும் அரசு இழப்பீடு வழங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உள்ளாட்சி அமைப் புகள் மூலமாக இறைச்சிக் கடைகளை  முறைப்படுத்தவும், இறைச்சிக் கழிவு களை மேலாண்மை செய்யவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். அதேபோல விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்து வது போல், மாநகராட்சி சிவில் பிரச்ச னைகள் மற்றும் காவல்துறை தொடர் பான பிரச்சனைகளுக்கு என்று மாவட்ட  ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்த வேண்டும்.  பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த  நவம்பர் மாதத்தில் இருந்து ஆவின் பால்  லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத்தொகை  வழங்கப்பட்டு வந்தது. ஆவின் நிர்வா கம் கடந்த 3 மாதங்களாக இதை நிறுத்தி விட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 விலை உயர்த்திக்  கொடுத்தால்தான், விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். தவிடு, புண் ணாக்கு, பருத்திக்கொட்டை, விதை சோளம், சோளத்தட்டை அறுவடை செய்வதற்கான கூலி ஆகியவை விலை  உயர்ந்துள்ள சூழ்நிலையில், தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் ஊக்கத் தொகையை நிறுத்தியுள்ளது, பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு  மூன்று மாதத்திற்கான  நிறுத்தப்பட்ட  ஊக்க தொகையை உடனே வழங்க  வேண்டும். ஆரம்ப பால் உற்பத்தியாளர்  சங்கத்திற்கு கால்நடை மருத்துவர் வருகை தந்து சிகிச்சை அளிப்பதற்கு ஏற் பாடு செய்ய வேண்டும். கால்நடைக ளுக்கு கலப்புத்தீவனம்  மானிய விலை யில் வழங்க வேண்டும். அனைத்துக் கறவை மாடுகளுக்கும் இன்சூரன்ஸ்  செய்து தர வேண்டும் என்றார். அமைச்சர் மீது புகார்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சா.முகிலன் பேசுகையில், கீழ் பவானி வாய்க்கால் ஆயக்கட்டு பகுதி யில் இருந்து ஆயக்கட்டு அல்லாத பகு திகளுக்கு தண்ணீர் எடுப்பது சட்டவிரோ தம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், காங்கேயம் வட்டம், வள்ளியரச்சல் கிரா மத்தில் உள்ள கீழ்பவானி பிரதான கால் வாய் மைல் 114.6 என்ற  அரியாங்காடு  என்னும் இடத்தில், புலஎண்: 471இல்  கசிவுநீரைத் தேக்கி வைக்க ஒரு சிறு  கசி வுநீர் தடுப்பணை அமைக்கப்பட்டுள் ளது. இந்தத் கசிவு நீர் தேக்கி வைக்கப் படும் தடுப்பணையில் இராட்சச மோட் டர்களை அமைத்து, ஆயக்கட்டு இல் லாத பகுதியான நல்லூர்பாளையம் என் னும் ஊரில் உள்ள ஒரு சிறிய தடுப்ப ணைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற் காக நடவடிக்கைகள் நடந்துவருகிறது. நல்லூர்பாளையம் தடுப்பணைக்கு அருகில் வீரசோழபுரத்தில் அமைச் சர் சாமிநாதன் குடும்பத்திற்கு சொந்த மாக 100 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள தாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக் கின்றனர். மேலும், இதே பகுதியில் வீர சோழபுரம் ஊராட்சியில் வைத்தீஸ்வரா பேப்பர் மில் என்ற காகித ஆலை அமைச்சர் சாமிநாதனின் நெருங்கிய உறவினர்களுக்கு சொந்தமானது. இந்த பகுதி தடுப்பணையில் தண் ணீரை நிரப்பினால், நிலத்தடி நீர்  உயர்ந்து, தண்ணீரை விலை கொடுத்து  வாங்கத் தேவையில்லாத நிலை ஏற்ப டும். அமைச்சர் குடும்பத்தின் தனிநல னுக்காக, சட்டத்தை மீறிச் செயல்படும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அப் புசாமி பேசுகையில், காளம்பாளையம், பள்ளிபாளையம் அருகே, மாநகராட்சி மருத்துவ கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகளை குடியிருப்புகளுக்கு மத்தி யில் உள்ள பகுதியில் கொட்ட எதிர்ப்பு  தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறை துணையுடன் குப்பை கொட்ட ஏற்பாடு  செய்யப்பட்டு வருகிறது. இதை உடனடி யாக  தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சி யர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தெருநாய் பிரச்சனை தொடர்பாக எங்கள் அமைப்பின் சார் பில் மட்டும் இதுவரை 25க்கும் மேற்பட்ட  மனுக்கள் அளித்துள்ளோம். அரசு கொள்கை ரீதியாக இதற்கு தீர்வு காண  வேண்டும் என்றார். வெள்ளகோவில் பிஏபி பாசன விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம் வேலுச் சாமி பேசுகையில், காங்கேயம் தாலுகா விற்கு உட்பட்ட கரூர் - கோவை நெடுஞ் சாலையில் பிஏபி பாலம் மோசமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் மறுபுறம் இருக்கும் விவ சாய நிலங்களுக்கு பாசன தண்ணீர் கிடைப்பதில்லை. இதையடுத்து கடந்த  ஜூன் மாதம் போராட்டம் நடத்தினோம். அதிகாரிகள் விரைவில் தீர்வு காண் பதாக உறுதியளித்தனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல்  உள்ளனர். தெருநாய்களால் காங்கே யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசா யிகளுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகரித்து  கொண்டே உள்ளன. இப்பிரச்சனையில்  அரசு முறையாக கவனம் செலுத்த வேண்டும். கடந்த மாதம் அளித்த மனு விற்கு இன்னும் எந்த பதிலும் வர வில்லை என்றார். இதைத்தொடர்ந்து பேசிய விவசாயி கள், குடிமங்கலம் பகுதியில் காட்டு  பன்றிகள் தொல்லை அதிகரித்துள் ளது. வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்பதாகப் புகார் அளித்த னர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ)  கிருஷ்ணவேணி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெளிக்ஸ் ராஜா, உடும லைப்பேட்டை வருவாய் கோட்டாட் சியர் ஜஸ்வந்த் கண்ணன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவ சாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயி கள் பங்கேற்றனர்.