அறந்தாங்கி, ஏப்.28-அறந்தாங்கியில் இந்திய மருத்துவர் கழக கிளை, தி போர்ட்சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திசைகள் மாணவவழிகாட்டு அமைப்பு சார்பில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்வு நடைபெற்றது. மருத்துவர் கழக கிளை தலைவர் டாக்டர் பிரேம்குமார் தலைமையும், முன்னாள் தலைவர் டாக்டர் லெட்சுமி நாராயணன், திசைகள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்லமனோகரி, ரோட்டரி பொருளாளர் கலந்தர் மைதீன் முன்னிலையும் வகித்தனர். கல்வியாளர் முருகபாரதி கலந்து கொண்டார். திசைகள் அமைப்பு பொருளாளர் முகமது முபாரக் வரவேற்றார்.புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர் விசுவநாதன், டாக்டர்கள் கனிமொழி, கோபாலகிருஷ்ணன், பொறியாளர் விக்னேஷ்வரன், வழக்குரைஞர் பிஸ்மில்லா, செவிலியப் பேராசிரியர் சோபியா ராணி, இயன்முறை மருத்துவர் காமராஜ், ஆசிரியர் ரஜினிகாந்த், சமையற்கலை வல்லுநர் மதன், அரசுத் தேர்வுக பயிற்றுநர் யோகராஜ், குடிமைப் பணி இயல் கல்வியாளர் அப்துல் புகாரி ஆகியோர் பேசினர். முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் கபார்கான், செயலாளர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொன்டனர் திசைகள் அமைப்பின் தலைவர் டாக்டர் தெட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.