tamilnadu

img

கிறித்தவ அறக்கட்டளை நிகழ்வு அனைத்துக் கட்சியினர் பங்கேற்பு

அவிநாசி, அக். 1- அவிநாசி அருகே கருனைபாளையத்தில் ஞாயிறன்று எலோஹிம் அசெம்பிளி அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.  அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சியில் கருணைபாளையத்தில் உள்ள எலோஹிம் அசெம்பிளி அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா ஞாயிறன்று நடைபெற்றது. முன்னதாக, இங்கு கடந்த வாரம்  நடைபெற்ற பிரார்த்தனையின்போது இந்து முன் னணியினர் காவல் துறையினருடன் அத்துமீறி நுழைந்து பிரார்த்தனையை நிறுத்தினர். இச்சூழலில் நடைபெற்ற இவ்விழாவில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் முத்துசாமி  பங்கேற்றுபேசுகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது அனைவருக்கும் சமம்,வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது இந்தியா. இதற்கெதிராக இப்பகுதியில் நடக் கின்ற அநீதிகளை ஒழித்துக்கட்டி,  ஆதிக்க சக்திகளை முறியடிப்போம் என்று குறிப்பிட்டார்.  இதைத்தொடர்ந்து சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் பேசுகையில், மனித நேயம், மத ஒற்றுமை, மத நல்லிணக்கம்  அனைத்து வீதிகளிலும், கிராமப்புஙங்களிலும் உருவாக்க வேண்டும் என்ற  நோக்கத்தோடு சிறுபான்மை மக்கள் நலக்குழு செயல் ட்டுக் கொண்டிருக்கிறது. கிறித்துவமக்களுக்கு உதவியாக சிறுபான்மைநல குழு இருக்கும் என்று கூறினார். இதேபோல், இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், விவ சாய சங்க ஒன்றிய தலைவர் முத்து ரத்தினம், கிளைச் செய லாளர் முத்து ராயப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாமியப்பன், முருகன், விசைத்தறி தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மோகனசுந்தரம், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகி ஜெகநாதன், காங்கிரஸ் கட்சி நிர்வாகி நவநீதகண்ணன், அதிமுக ராஜேந்திரன், ரமேஷ், ராசுக்குட்டி பொறியாளர் சென்னை லால் ராபர்ட் மற்றும் சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலை வர் கினிமேன்மென்வேல் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.