ஈரோடு, ஜன.24- காஞ்சிகோயில் அருகே வெறிநாய் கடித்து இறந்த ஆடுகளுடன் காஞ்சிக்கோ யில் 4 ரோட்டில் பாதிக்கப் பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பெருந் துறை வட்டம், காஞ்சி கோவில் கிராமத்திற்குட்பட் டது செங்காளிபாளையம். இங்கு, பழனிசாமி என்பவ ரது மூன்று பட்டியில் தெரு நாய்கள் வியாழ னன்று இரவு புகுந்து ஆடுகளை கடித்துக் கொன்றுள்ளது. மறுநாள் காலை இதனைய றிந்து பாதிக்கப்பட்ட பழனிசாமி பதறினார். அத்துடன் உயிரிழந்த 7 ஆடுகளை காஞ்சி கோவில் நால் ரோட்டில் கிடத்தி போராட்டத் தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அப்ப குதி விவசாயிகள் உள்ளிட்டோரும் போராட் டத்தில் பங்கேற்றனர். அப்போது வட்டாட்சி யர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து நிவாரணம் பெற்றுத்தர நடவ டிக்கை எடுப்பதாக வாய்மொழியாக உத்தர வாதம் அளித்தனர். இதனையடுத்து போராட் டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதே போன்று, கடந்த சில வாரங்களுக்கு முன் மற்றொரு பட்டியில் புகுந்த தெருநாய்கள் ஆடுகளைக் கடித்துக் கொன்றது குறிப் பிடத்தக்கது.